ETV Bharat / state

"மக்களிடம் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்த வேண்டுமென விஜய் நினைக்கிறாரா?" - வானதி சீனிவாசன் கேள்வி! - VANATHI SRINIVASAN

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், தவெக தலைவர் விஜய் மக்களிடம் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறாரா? எனத் தெரிவில்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன், விஜய் கோப்புப்படம்
வானதி சீனிவாசன், விஜய் கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2025, 1:11 PM IST

கோயம்புத்தூர்: பொங்கல் விழாக் கொண்டாடத்திற்காக லண்டன் சென்ற பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், நேற்று (ஜன.21) இரவு கோயம்புத்தூர் திரும்பினார். அப்போது, கோவை விமான நிலையத்தில் பாஜகவினர் சார்பில், வானதி சீனிவாசனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், "லண்டனில் நடைபெற்ற தமிழ் மாணவர்களின் பொங்கல் விழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கான ஒரு கூட்டம் உட்பட சில நிகழ்வுகளில் பங்கேற்றேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், திருவள்ளுவரையும், வள்ளலாரையும் வேறு யாரோ களவாட முயற்சிக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திக்கின்றார். இந்து ஞான கருத்துக்களை தான் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். வள்ளலாரும் இந்து சமய ஞானத்தின் கூறாகவும் விளங்கியவர். திமுக அரசு இந்த இரு தமிழ் அடையாளங்களையும், அவர்கள் இருவரும் இந்துக்கள் அல்லாதவர்கள் போல உருவத்தில் மத அடையாளங்களை தவிர்த்து விட்டு வருகின்றனர்.

வானதி சீனிவாசன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

மக்கள் ஏற்கமாட்டார்கள்:

இவர்களுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என பேசுகிறார்கள். இந்து மத மரபுகளை மறுதலித்து, தனியாக ஒரு தமிழ் அடையாளத்திற்குள், திராவிட அடையாளத்திற்கு நுழைய வைத்து பயன்படுத்துகின்றனர். வள்ளுவரும், வள்ளலாரும் இந்த நாட்டின் தனித்துவமானவர்கள், முதலமைச்சர் பதட்டத்திற்கு உள்ளாகி இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

உலக அளவில் திருக்குறளுக்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருப்பவர் பிரதமர் மோடி, ஆனால் சமத்துவ பொங்கல் என்ற பெயரில் திமுக அரசு தமிழர்களுக்கான மரபு அடையாளங்களை சீரழிக்க நினைக்கிறது. சமத்துவ பொங்கல் யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆனால் கோயிலில் இருந்து தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்குகிறது. கோயில் என்பது இந்து மத பண்டிகைகளோடு இரண்டறக் கலந்தது.

திமுக அரசு இந்து மத வெறுப்பின் காரணமாக இந்த அடையாளங்களை மறைத்து சமத்துவ பொங்கல் என மக்கள் முன்பாக கொண்டு செல்கின்றனர், இதை மக்கள் ஏற்கமாட்டார்கள். கல்வித்துறை மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுவானது. உயர்கல்வித்துறைக்கு அதிகமான நிதி மத்திய அரசு கொடுக்கிறது. இதற்கு முன்பாக துணைவேந்தர் நியமனம் பல்வேறு முறைகேடுகளுக்கு இடையில் நடைபெற்றது.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய விவகாரம்: மக்கள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை - தமிழ்நாடு அரசு

ஆனால் பாஜக ஆட்சிக்குப் பின்னர் கல்வித்துறை சுதந்திரமாக சிறந்த கல்வியாளர்களை வைத்து நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. ஆளுநர் மீது தனிப்பட்ட தாக்குதலை திமுக அரசு நடத்தி வருகிறது. அவரை தரக்குறைவாக விமர்சிப்பது, கட்சி அரசியலுக்குள் அவரை இழுத்து வருவதும் திமுக தான்.

தவெக விஜயிடன் என்ன தீர்வு உள்ளது?

டங்க்ஸ்டன் விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக பாஜக ஒருபோதும் இருக்காது. தமிழக மக்களுக்காக எப்பொழுதும் குரல் கொடுக்கும். விமான நிலையத்திற்கு சென்னையில் எங்கே இடம் இருக்கிறது என்பதை தவெக விஜய் சொல்ல வேண்டும். விஜய் மக்களிடம் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறாரா? எனத் தெரியவில்லை. வளர்ச்சி என வரும் பொழுது கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு விஜயிடம் என்ன தீர்வு இருக்கிறது என்பதை சொல்ல வேண்டும்.

மாட்டு கோமியம் விவகாரம்:

மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள், கோமியத்தை குடிக்க மாட்டார்களா? என தமிழிசை பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, சாப்பிடுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். இதில் கட்சி என்ன பேச முடியும்? தனிப்பட்ட உரிமையை மதிக்க வேண்டும் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.