வருடாந்திர பராமரிப்புப் பணி: பழனி முருகன் கோயிலில் 40 நாட்களுக்கு நிறுத்தப்படும் ரோப் கார் சேவை! - rope car service - ROPE CAR SERVICE
Published : Oct 1, 2024, 8:13 PM IST
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தன் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் மின் இழுவை ரயில், படிப்பாதை, யானை பாதை, ரோப் கார் வழியாக மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில் பெரியவர்கள், சிறியவர்கள் என பலரும் பயன்படுத்தும் ரோப் கார் சேவை, பராமரிப்பு பணிகளுக்காக மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் ரோப் கார் சேவையை அக்டோபர் 7ஆம் தேதி முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரோப் காரில் மேல் தளத்தில் புதிய சாஃப்ட்டுகள், புதிய கம்பி வடம் , உருளைகள், பெட்டிகள் பொருத்தப்பட்டு பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறும். பின்னர் ஐஐடி வல்லுநர் குழு ஆய்வு செய்த பிறகு ரோப் கார் சேவை பராமரிப்பு பணிகள் முடிந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயிலை பயன்படுத்தி கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அறிவித்துள்ளனர்.