அவலாஞ்சி பகுதியில் குட்டிகளுடன் புலி உலா என பரவும் வீடியோ.. நீலகிரி மாவட்ட வன அதிகாரி அளித்த விளக்கம்
Published : Oct 11, 2024, 7:15 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தை பொறுத்த அளவில் 65 சதவீதம் வனப்பகுதிகளை கொண்ட பகுதியாகும். இங்கு புலி, கரடி, கருஞ்சிறுத்தை, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட அரிய வகை வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. இவை அவ்வபோது உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலை ஓரங்களில் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் அவலாஞ்சி வனப் பகுதியில் மூன்று குட்டிகளுடன் புலி ஒன்று உலா வருவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இந்த வீடியோவின் உண்மைத் தன்மை அறிய நீலகிரி மாவட்ட ஈடிவி பாரத் செய்தியாளர் நடேசன், மாவட்ட வன அதிகாரி கெளதமை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவலாஞ்சி வனப் பகுதியில் புலி ஒன்று குட்டியுடன் உலா வருவதாக பகிரப்படும் வீடியோ அங்கு அந்தப் பகுதியில் எடுக்கப்பட்டது தான், ஆனால் அது அண்மையில் எடுக்கப்பட்டது அல்ல, பழைய வீடியோ என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என விளக்கம் அளித்துள்ளார்.