தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

குடியிருப்புக்குள் ஹாயாக வலம் வரும் கரடிகள்! வைரலாகும் வீடியோ! - COONOOR BEAR ENTERS VILLAGE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2025, 2:17 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சேலாஸ் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பில் நேற்று முன்தினம் (ஜன.23) இரவு மூன்று கரடிகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வந்தன. அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், கடந்த மாதம் இதே பகுதியில் வளர்ப்பு கோழிகளை வேட்டையாட சிறுத்தை ஒன்று வந்தது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தல் இருந்தனர். இந்நிலையில் தற்போது கரடி குடியிருப்புக்குள் வலம் வரும் காட்சிகள் அப்பகுதிகளை மேலும் பதற்றமடைய செய்துள்ளது.

நீலகரி வனப்பகுதிக்கு அருகே தேயிலை தோட்டங்கள் உள்ளதால், இரவு நேரங்களில் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அப்பகுதிக்கு வருகின்றனர். இதனால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சுற்றித் திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

இது குறித்து பேசிய நீலகிரி வனத்துறையினர், “வனப் பணியாளர்கள் முழு நேரமும் கரடிகள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் கரடிகள் அப்பகுதிக்கு வரும் நிலையில் உடனடியாக கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனக் கூறினர்.

ABOUT THE AUTHOR

...view details