தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஊட்டியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்.. கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்! - kurinji flowers bloom in Ooty - KURINJI FLOWERS BLOOM IN OOTY

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2024, 3:34 PM IST

நீலகிரி: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் பூத்து, எப்ப நாடு மலைப்பகுதி முழுவதும் நீல நிறத்தில் ரம்மியமாக காட்சியளித்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். தென்னிந்தியாவில் அமைந்துள்ள நீலகிரி மலைத்தொடரில் நீலக்குறிஞ்சிகள் அதிகளவு பூப்பதால் நீலகிரி மலை என்று அழைக்கப்படுகிறது. ‘ஸ்டபிலான்தஸ் குந்தியானஸ்’ என்பது அவற்றின் தாவரவியல் பெயராகும். 30 முதல் 60 செ.மீ. உயரம் வரையில் இருக்கும் பூக்கள் கோயில் மணிகளின் உருவம் கொண்டவை.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எப்பநாடு கிராமத்தைச் சுற்றியுள்ள கொரனூர், எடக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலை தொடர்களில், நீலக்குறிஞ்சி மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. இதனால், குறிஞ்சி மலர்களை கண்டு ரசிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள், தாவரவியல் துறை பயிலும் மாணவ, மாணவிகள், புகைப்படக் கலைஞர்கள் இப்பகுதிக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.

குறிஞ்சி பூக்கள் பூத்துக் குலுங்குவதால் எப்ப நாடு மலைப்பகுதி முழுவதும் தற்போது நீல நிறத்தில் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details