குடியிருப்புப் பகுதியில் உலாவிய சிறுத்தை .. அச்சத்தில் பொதுமக்கள்! - LEOPARD
Published : Dec 10, 2024, 4:20 PM IST
நீலகிரி : நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதிகள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சமீப காலமாக வனவிலங்குகள், உணவு, மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலைகளில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைவதுடன், அவ்வப்போது மனித வனவிலங்கு மோதலும் ஏற்படுகின்றன.
அந்தவகையில் கோத்தகிரி, குன்னுாா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகாித்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், குன்னூர் பகுதியில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மேலும், இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி சிறுத்தையைக் கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் பகுதி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.