கொடைக்கானலில் கடல் போல் படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும் பனியின் டிரோன் காட்சிகள்!
Published : Jan 23, 2024, 11:25 AM IST
திண்டுக்கல்: உலகளாவிய சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் வருடந்தோறும் டிசம்பர் இறுதி முதல் ஜனவரி வரை பகல் நேரங்களில் வறண்ட வானிலையும், இரவு நேரங்களில் கடும் குளிர் உறை பனியுடன் நிலவும். ஆனால், இந்த ஆண்டு பருவம் தவறிய மழை உள்ளிட்ட பல்வேறு சீதோஷ்ன நிலை மாற்றத்தால், ஒரே ஒரு நாள் மட்டும் உறை பனி நிலவியது. உறை பனி இல்லாமலும் முன் பனி காலம் தற்போது துவங்கி இருக்கிறது.
இதனால் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பனி, கடல் போல் படர்ந்து இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் காட்சியளிக்கிறது. இந்நிலையில், கொடைக்கானல் அருகே உள்ள பிரபல சுற்றுலாத் தலமான மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்தில் பல ஏக்கரில் பசும்புற்கள் கொண்டதாக இருக்கிறது. இது போன்ற பனி படர்ந்த இடங்களில் பசுமை நிறைந்த புல்வெளிகளை காக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: “இது மந்திரிக்கு அழகு அல்ல” - நிர்மலா சீதாராமனை சாடிய அமைச்சர் துரைமுருகன்!