சகுனி வேடம் போட்ட கலைஞன் மேடையிலேயே சரிந்த சோகம்.. வைரல் வீடியோ! - karnataka artist Dies On Stage - KARNATAKA ARTIST DIES ON STAGE
Published : May 4, 2024, 8:10 PM IST
பெங்களூரு: யலஹங்காவில் நடைபெற்ற குருக்ஷேத்திர நாடக நிகழ்ச்சியில் சகுனி வேடமணிந்து நடித்துக் கொண்டிருந்த கலைஞர் மேடையிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு, யலஹங்கா தாலுகாவில் உள்ள சாதனூர் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு குருக்ஷேத்திர நாடகம் நடைபெற்றுள்ளது. இதில் சகுனி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த நாடகக் கலைஞர் முனிகெம்பண்ணா என்பவர், நள்ளிரவு 1.30 மணியளவில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த நிலையில், மேடையிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.
மறைந்த நாடகக் கலைஞர் முனிகெம்பண்ணா ஓய்வு பெற்ற எழுத்தாளராவார். இவர் 28வது கன்னட சாகித்ய சம்மேளனத்தின் தேவனஹள்ளியின் தலைவராக இருந்துள்ளார். இவர் நாடகத்தின் பொழுதே மேடையிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இறந்த முனிகெம்பண்ணாவின் உடலுக்கு, அவரது சொந்த ஊரான அரதேச ஹள்ளியில் இன்று (சனிக்கிழமை) இறுதிச் சடங்குகள் நடைபெற்றுள்ளது.
முன்னதாக, புதன்கிழமை கோட்டா காந்தி மைதானம் அருகே உள்ள ஸ்ரீ தர்மஸ்தலா க்ஷேத்திரத்தில் யக்ஷகானா மேளாவின் கலைஞரான கங்காதர புத்தூர் (60) யாகம் முடிந்து மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.