நெல்லையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு.. கள நிலவரம் என்ன? - lok sabha election 2024
Published : Apr 19, 2024, 2:49 PM IST
திருநெல்வேலி: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
திருநெல்வேலி தொகுதியை பொருத்தவரை மொத்தம் ஆயிரதது 810 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 331 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், 203 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தொகுதி முழுவதும் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் தொகுதியில் உள்ள ஆயிரத்து 175 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பட்டு அறையில் இருந்தபடி கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்களை பொருத்தவரை இந்தியா கூட்டணி சார்பில் ராபர்ட் ப்ரூஸ், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வேட்பாளர்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளனர்.