திருவிழா சிறப்பு பேருந்தில் ஒழுகிய மழைநீர்.. மக்கள் அவதி! - Rain bus people affected - RAIN BUS PEOPLE AFFECTED
Published : May 11, 2024, 5:48 PM IST
தேனி: தமிழகத்தில் கோடைமழை பெய்து வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை முதல் இரவு வரை கனமழை பெய்து வருகின்றனர். அங்குள்ள வீரபாண்டி என்னும் ஊரின் பிரசித்தி பெற்ற கௌமாரியம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றும் நிலையில் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டனர்.
அந்த பேருந்துகளில் மேலோடுகள் சீராக இல்லாததால், ஆங்காங்கே மழை நீர் பேருந்து இருக்கைகளில் கொட்டி கொண்டிருப்பது பயணிகளை நனைந்தவாறு உட்காரச் செய்கின்றன.
இதனால் பயணிகள் நின்றபடி பயணிக்கவும், குடைகளை விரித்து பேருந்துக்குள் உட்காரும் நிலை உருவாகி உள்ளது. இத்திருவிழாவிற்காக விடப்பட்ட அரசின் சிறப்புப் பேருந்துகளில் அருவி போல் கொட்டிய மழை தண்ணீரில் மக்கள் குடைபிடித்தபடி பயணித்த வீடியோ வெளியாகி உள்ளது. இவ்வாறு பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் மழை நீரில் நனைந்தவாறு பயணித்து பெரும் அவதிக்கு உள்ளாகும் நிலை பெரும் அச்சுறுத்தல் எனவும், இவ்வாறு மேலோடுகலள் சீராக இல்லாமல் இருக்கும் பேருந்துகளைச் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.