தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பக்ரீத் பண்டிகை; செஞ்சி வாரச்சந்தையில் ஆடு, மாடு விற்பனை அமோகம்! - Senji Goat Market - SENJI GOAT MARKET

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 2:28 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வாரச்சந்தையானது வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், எதிர்வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆடு மற்றும் மாடுகளை வாங்க ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் வியாபாரிகள் செஞ்சிக்கு வந்ததால் அப்பகுதி மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. 

இந்த சந்தையில் வெள்ளாடு, செம்மறி ஆடு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள் வியாபாரத்துக்கு வந்தன. மேலும், ஒரு மாட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும், செஞ்சியைச் சுற்றி மலைப்பகுதிகள் இருப்பதால், இங்கு இயற்கையான முறையில் வளர்ந்து வரும் செடி கொடி தழைகளை மேய்ந்து வளர்க்கப்படும் ஆடுகள் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என ஆடுகளை வாங்க தமிழகம் மற்றும் பிற மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற பகுதியில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். அதேநேரம், ஆடுகள் அமோகமாக விற்பனையாகி, இதனால் சுமார் ரூ.6 கோடி அளவிற்கு ஆடுகள் மற்றும் மாடுகளின் விற்பனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details