தேனியில் வித்தியாசமான முறையில் தேர்தல் விழிப்புணர்வு.. மக்களிடையே வரவேற்பைப் பெற்ற பனி சிற்பம்.. - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 11, 2024, 3:52 PM IST
தேனி: நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வரக்கூடிய ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காகத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாகத் தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில், "MY VOTE MY RIGHT" (என் வாக்கு என் உரிமை) என்று வாசகங்களை ஐஸ் கட்டி சிற்பமாக உருவாக்கி வித்தியாசமான முறையில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், என் வாக்கு என் உரிமை என்று ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்ட ஐஸ் கட்டிகள் முன்பு தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.வி.ஷஜீவனா, உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாக்கு செலுத்தும் விரலைக் காட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, தேர்தலில் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், தேனியில் என் வாக்கு என் உரிமை (MY VOTE MY RIGHT) என்ற வாசகங்களை ஐஸ் கட்டிகளில் உருக்கி வித்தியாசமான முறையில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வு அனைவரது மத்தியிலும் மிகுந்த வரவேர்ப்பைப் பெற்றுள்ளது.