ETV Bharat / state

பிப்ரவரி முதல் சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள் சேவை! - CHENNAI

சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை பிப்ரவரி மாதம் முதல் இயக்க போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி
சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2025, 3:04 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அரசு மாநகர் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் ஆங்காங்கே மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களின் அருகில் உள்ள பகுதிகளுடன் இணைப்பதற்கும், ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் புதிய பயண அட்டையை அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கை 2024 ஜூன் மாதம் 14 ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த வரைவு திட்ட அறிக்கையின் படி, மாநிலம் முழுவதும் மினி பேருந்துகளை இயங்குவதற்கான அனுமதி வழங்க திட்டமிடப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளுக்கு மினி சேவை வழித்தடம் வழங்கப்படமாட்டாது. அதே நேரத்தில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு மினி பேருந்து சேவை வழங்க அனுமதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அதிகபட்சமாக 25 கி.மீ. தூரம் வரை மினி பஸ்களை இயக்கவும், இதில் 18 கி.மீ., தொலைவுக்கு சேவை இல்லாத வழித்தடங்களிலும், 8 கி.மீ., தொலைவுக்கு ஏற்கனவே சேவை உள்ள வழித்தடங்களிலும் அனுமதி வழங்கப்படும் எனவும் வரைவு திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தவிர்த்து ஒரு மினி பேருந்தில் அதிகபட்சமாக 25 பேர் பயணம் செய்யும் வகையில் இருக்கை வசதி இருக்கலாம் என்றும், அனைத்து மினி பஸ்களிலும், ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த மினி பஸ் வரைவு திட்ட அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மேலும், 2024-ம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க எதிர்ப்பும் கிளம்பியது.

இந்த நிலையில், பிப்ரவரி மாதம் முதல் சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது . சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.