நீலகிரி: கூடலூரில் ஒரே குடும்பமாக சுற்றித் திரிந்த யானைகள் - ட்ரோன் காட்சி வெளியீடு - NILGIRI ELEPHANT - NILGIRI ELEPHANT
Published : Jul 7, 2024, 10:50 AM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம், 65 சதவீதம் வனங்கள் சூழ்ந்த பகுதியாக இருக்கும் நிலையில், இப்பகுதியில் கரடி, காட்டெருமை, புலி, சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதி நோக்கி படையெடுப்பது வழக்கமாக உள்ளது.
இதனால், கூடலூர் குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டி யானைகளால் பலர் உயிரிழந்து உள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில் மனித வனவிலங்கு மோதலில் இருந்து மனிதர்களை பாதுகாக்க நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பாக யானைகள் நடமாட்டம் குறித்த ட்ரோன் கேமராக்கள் மூலம் யானைகளை கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் மூலம் குடியிருப்புகளில் யானைகள் வருவதை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூடலூர், தேவர் சோலை பகுதியில் நீலகிரி மாவட்ட வனத்துறையினர் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வீடியோ பதிவுகளை தற்போது வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி நாள்தோறும் நடைபெறும் என்றும் குடியிருப்பு பகுதியில் உலா வரும் வனவிலங்குகளை, ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்படும் என நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.