ETV Bharat / state

4 ஆண்டுகளில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் ஈரோடு கிழக்கு.. பிப்ரவரி 5-இல் இடைத்தேர்தல்! - ERODE BY ELECTION DATE

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2025, 3:00 PM IST

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் டெல்லியில் இன்று அறிவித்தது. அப்போது, தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10-ம் தேதி மனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

4 ஆண்டுகளுக்குள் 3வது முறையாக தேர்தலை சந்திக்கும் ஈரோடு கிழக்கு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முக்கியத் தொகுதிகளில் ஒன்று ஈரோடு கிழக்கு. திராவிட பேராசான் தந்தை பெரியார் பிறந்த மண் ஈரோடு. இது தொகுதி மறுவரையறைகளின்கீழ் கடந்த 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் ஈரோடு மாநகர் மற்றும் தாலுகா பகுதிகள் உள்ளன.

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே, 5 ஆண்டுகளுக்குள் 3-வது முறையாக தேர்தலை சந்திக்கும் தொகுதி ஈரோடு கிழக்கு ஆகும். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. தந்தை பெரியாரின் சகோதரர் சம்பத்தின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜாவை விட 8904 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

ஆனால், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி திருமகன் ஈவேரா உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 46. இதனையடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த முறையும், தொகுதியை காங்கிரஸுக்கே கொடுத்தது திமுக. அப்போது, காங்கிரஸ் சார்பில் மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார்.

அதிமுக இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்த நிலையில், நடந்த இந்த இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டார். இந்த தேர்தலில் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அதாவது 1,10,156 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

இது சட்டப்பேரவைத் தேர்தலில் இவரது 2-வது வெற்றியாகும். 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், இந்த வெற்றியின் மூலம் 39 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சட்டப் பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார்.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவாக பாதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, டிசம்பர் 18-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்குள் 3-வது முறையாக தேர்தலை சந்திக்கும் தொகுதி என்ற பெயரை பெற்றது ஈரோடு கிழக்கு. இந்த இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதால், 4 ஆண்டுகளுக்குள் ஒரே தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் போட்டியிட்ட தொகுதி என்ற பெயரும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கிடைக்கும்.

உடனே அமலுக்கு வந்த விதிமுறைகள்: இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.