தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கூழ் விற்பனை செய்து வாக்கு சேகரித்த தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணி! - LOK SABHA ELEcTION 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 5:09 PM IST

தருமபுரி: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகின்ற வழக்கறிஞர் ஆ.மணி, இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட பழைய தருமபுரி, சவுர், கொளகத்தூர், முத்துப்பட்டி, குண்டல்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவர் வாக்கு சேகரித்தார். அப்பொழுது, பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து மலர் தூவி வரவேற்றனர்.

தொடர்ந்து, குண்டல்பட்டி கிராமத்தில் தள்ளுவண்டி கடையில் கூழ் விற்பனை செய்து கொண்டிருந்த மூதாட்டிக்கு திமுக வேட்பாளர் ஆ.மணி கூழ் விற்பனை செய்தும், கூழ் குடித்தும், அந்த வழியே சென்றவர்களிடம் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் போது, வயது முதிர்ந்த பெரியவர்களிடம் ஆசி பெற்று தனக்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் எம்.எல்.ஏ.மனேகரன், பிரபுராஜசேகர் மற்றும் திமுக கட்சியினர் கலந்து கொண்டனர். 

ABOUT THE AUTHOR

...view details