தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ராயன் ரிலீஸ்; தனுஷ் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் வழிபாடு! - RAAYAN RELEASE ON JULY 26 - RAAYAN RELEASE ON JULY 26

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 3:46 PM IST

தேனி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் தனுஷ். இவர் தற்போது தனது 50வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

இதில், தனுஷ், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூலை 26ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தனுஷ் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டம், முத்துரங்காபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலான ஸ்ரீ கஸ்தூரியம்மாள் ஸ்ரீ மங்கம்மாள் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயிலில் அம்பாள் மற்றும் சுவாமிக்கு மலர் மாலை அணிவித்து, பூஜைகள் நடத்தி சாமி தரிசனம் செய்தார். 

முன்னதாக, இந்த கோயில் புனரமைப்பு பணிக்கு தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரிராஜா பெரிய அளவில் நிதி கொடுத்து உதவி உள்ளார். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details