பிஸ்கட் அலங்காரத்தில் கோவை இருக்கன்குடி மாரியம்மன்! - Irukkangudi Mariyamman Temple - IRUKKANGUDI MARIYAMMAN TEMPLE
Published : Jul 26, 2024, 3:53 PM IST
கோயம்புத்தூர்: தமிழ் மாதங்களில் முக்கிய மாதமான ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள், இந்துக்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தாகும். அதிலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்வர். அந்த வகையில் ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை தாமஸ் வீதியில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பால திரிபுர சுந்தரி அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனை குழந்தையாக பாவித்து 3,000க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பிஸ்கட் பாக்கெட்டுகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் குருக்கள் கணேஷ் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் மாரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆடி வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அம்மனை குழந்தையாக பாவித்து பால அலங்காரம் எனப்படும் பிஸ்கட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது, இதனை நாளை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்