தேசிய சாலை பாதுகாப்பு: சீட் பெல்ட் அணிவது குறித்து தருமபுரி போலீசார் வாகன விழிப்புணர்வு! - வாகன பேரணி
Published : Feb 12, 2024, 6:50 PM IST
தருமபுரி: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தருமபுரி மாவட்ட நிர்வாகம் நடத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக நான்கு சக்கர வாகனங்கள் குறிப்பாக கார் ஜீப் போன்ற வாகனங்களில் முன் இருக்கைகளில் அமர்வோர் கட்டாயம் சீட்டு பெல்ட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் நான்கு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே தொடங்கிய இந்த நான்கு சக்கர வாகன பேரணியை சேலம் மண்டல துணை இயக்குநர் பிரபாகர் கொடி அசைத்த தொடங்கி வைத்தார். கார் பேரணி செந்தில் நகர், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், நேதாஜி பைபாஸ் சாலை வழியாக சென்று தருமபுரி நகரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் இந்நிகழ்ச்சியில் பேசும்போது, சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களில் பயணிக்கும் போது விபத்துக்கள் நேரிடும். இப்போது தூக்கி வீசப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர்களாக உள்ளவர்களும் அருகில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் சீட்டு பெல்ட் அணிய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த விழிப்புணர்வு பேரணியில் 100க்கும் மேற்பட்ட கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து சென்றது.