தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மதுபோதையில் போக்குவரத்து போலீசிடம் அடாவடி செய்த ரவுடி! - Chennai Crime - CHENNAI CRIME

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 9:09 AM IST

சென்னை: சென்னை பெரம்பூர் போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மாமல்லன். இவர் நேற்று காலை 10 மணி அளவில் வழக்கம்போல் அகரம் சந்திப்பில் பணியில் இருந்துள்ளார். அப்போது ஆட்டோ ஒன்று வேகமாக வந்து, முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. அதனைக் கண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் மாமல்லன் உள்ளிட்ட போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை மீட்டு, பாதுகாப்பாக அனுப்பிவைத்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து, ஆட்டோவை துரத்திச் சென்று பிடித்தபோது, ஆட்டோ ஓட்டிச் சென்ற நபர் முழு போதையில் இருந்துள்ளார். அப்போது, ஆட்டோவை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசாரை தகாத வார்த்தைகளில் திட்டியும், உதவி ஆய்வாளர் மாமல்லனை கீழே தள்ளியும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதனால் போலீசார், திருவிக நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவிக போலீசார், குடிபோதையிலிருந்த நபரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.  

அதில், அந்த நபர் பெரம்பூர் எஸ்எஸ்வி கோயில் தெருவைச் சேர்ந்த அப்பு என்ற அமர்நாத் (29) என்பதும், இவர் மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் உள்ளதும், மேலும் அவர் சரித்திரப் பதிவேடு ரவுடியாகவும் உள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, அப்பு என்ற அமர்நாத் மீது வழக்குப்பதிவு செய்த திருவிக நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது போதையில் போக்குவரத்து காவலரை பணி செய்ய விடாமல் தடுப்பது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ABOUT THE AUTHOR

...view details