யூடியூப் ஷாப்பிங்: பிளிப்கார்ட், மிந்திரா பொருள்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்! - YOUTUBE SHOPPING AFFILIATE PROGRAM
யூடியூப் தங்கள் படைப்பாளர்களுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்திதரும் வகையில் ‘யூடியூப் ஷாப்பிங்’ (YouTube Shopping) எனும் அஃபிலியேட் திட்டத்தை பிளிப்கார்ட், மிந்திரா உடன் இணைந்து செயல்படுத்தியுள்ளது.
பிளிப்கார்ட், மிந்திரா உடன் இணைந்து யூடியூப் ஷாப்பிங் அஃபிலியேட் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. (Youtube Blog)
யூடியூப் தளம் அதிக பார்வையாளர்களையும், அதிகளவு படைப்பாளர்களையும் கொண்ட தளமாக விளங்குகிறது. இதில் இருக்கும் படைப்பாளர்களுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தி தரவும், பார்வையாளர்களுக்கு சீரான ஷாப்பிங் அனுபவத்தை வழங்க வேண்டும் என நினைத்த கூகுள், ‘யூடியூப் ஷாப்பிங்’ (Youtube Shopping) எனும் இணைப்பு வருவாய் திட்டத்தை (அஃபிலியேட் புரோகிராம்) பிளிப்கார்ட் (Flipkart), மிந்திராவுடன் (Myntra) இணைந்து அறிமுகம் செய்துள்ளது.
இணைப்பு வருவாய் திட்டம் என்பது, இருவேறு நிறுவனங்கள் ஒன்றிணைந்து வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகும். இதன் வாயிலாக விளம்பரங்களுக்கு கூடுதல் செலவு செய்யாமல், விற்பனையாளர்கள் பட்டியலிட்டிருக்கும் பொருள்களை ஷாப்பிங் நிறுவனங்களால் வேகமாக விற்பனை செய்யமுடியும்.
யூடியூப் ஷாப்பிங் அஃபிலியேட் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
படைப்பாளர்கள் தங்கள் வீடியோக்களில் தயாரிப்புகளை டேக் செய்யலாம்.
பார்வையாளர்கள் டேக் செய்யப்பட்ட தயாரிப்புகளை வாங்கும்போது படைப்பாளர்களுக்கு தரகுத் தொகை (கமிஷன்) கிடைக்கும்.
இந்த திட்டம் பிளிப்கார்ட் மற்றும் மிந்திராவுடன் இணைந்து தொடங்கப்படுகிறது.
படைப்பாளர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
யூடியூபில் வீடியோவைப் பார்க்கும்போதே பிடித்த பொருள்களை ஆர்டர் செய்ய முடியும் என்பதால், பார்வையாளர்களுக்கும் இது ஒரு தேவையான சேவையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரியேட்டர்களுக்கு பொற்காலம்:
இதற்காக நாட்டின் பெரும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட், இதன் கீழ்வரும் மிந்திரா உடன் கூகுள் இணைந்துள்ளது. இந்த கூட்டு முயற்சியின் வாயிலாக வீடியோ படைப்பாளர்கள் (கண்டென்ட் கிரியேட்டர்கள்) தங்கள் காணொளிகளில் ஷாப்பிங் இணைப்புகளை சேர்க்க முடியும். இதை கிளிக் செய்து பார்வையாளர்கள் பொருள்களை ஆன்லைனில் வாங்கினால், சந்தைப்படுத்துதலுக்கான தரகுத் தொகை கிரியேட்டருக்கு கிடைக்கும்.
யூடியூப், இதன் வாயிலாக கிரியேட்டர்களுக்கு கூடுதல் வருவாயை உறுதி செய்துள்ளது. சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், யூடியூப் ஷாப்பிங் அஃபிலியேட் திட்டம் என்பது, படைப்பாளர்கள் தங்கள் வீடியோக்கள், ஷார்ட்ஸ், நேரலை ஸ்ட்ரீமிங் ஆகியவற்றில் பிளிப்கார்ட், மிந்திரா தளங்களில் பட்டியலிடப்பட்டிருக்கும் தயாரிப்புகளை பரிந்துரைப்பதன் வாயிலாக சம்பாதிக்க முடியும்.
கிரியேட்டர்கள் பணம் சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும்?
இதற்காக கிரியேட்டர்கள் யூடியூப் கணக்கு வருவாய் பெற தகுதியான (Monetize) நிலையில் இருப்பது அவசியம். அப்படி இருந்தால் கீழ்வரும் படிகளைப் பின்பற்றினால் போதுமானது.
முதலில் யூடியூப் ஸ்டுடியோ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
இவற்றை சரியான செய்ய கூகுள் தக்க ஏற்பாடுகளை யூடியூப் ஸ்டுடியோவில் மேற்கொண்டுள்ளது. இந்த புதிய திட்டம் இந்தியாவில் யூடியூப் படைப்பாளர்களுக்கு ஒரு பெரிய ஊக்கியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தையும் மேம்பட்ட நிலைக்கு மாற்றியமைக்கும் என நம்பப்படுகிறது.