ஹைதராபாத்: விவோ (vivo) நிறுவனம் 80W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன், தனித்துவமான வடிவமைப்புடன் கூடிய புதிய விவோ டி3 ப்ரோ 5ஜி (vivo T3 Pro 5G) என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, அம்சங்கள், விற்பனை விவரங்கள் ஆகியவை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ஸ்பெசிஃபிகேஷன்ஸ் (Specifications):
- 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+)
- 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே(3D Curved AMOLED Display)
- 1,080 x 2,392 பிக்சல்ஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 எஸ்ஓசி சிப்செட் (Snapdragon 7 Gen 3 SoC Chipset)
- அட்ரினோ 7120 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு
- இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-Display Optical Fingerprint Sensor)
- IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant)
ஆண்ட்ராய்டு: ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த புதிய விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் 2 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமரா: ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) அமைப்புடைய 50mp சோனி IMX882 பிரைமரி கேமரா மற்றும் 8mp அல்ட்ரா வைடு கேமரா என இரண்டு பின்பக்க கேமராக்களைக் கொண்டுள்ளது. இதுமட்டுமல்லாது, 16mp செல்பி கேமராவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் சினிமாடிக் 4K வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.