தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

ஒன்பிளஸ் அப்டேட்: ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஆக்சிஜன்OS 15 ரெடி

ஒன்பிளஸ் (Oneplus) நிறுவனம் தங்கள் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒன்பிளஸ் அப்டேட்டை அறிவித்துள்ளது. அதன்படி, எந்தெந்த ஒன்பிளஸ் போன்களுக்கு எப்போது புதிய ஆக்சிஜன்OS 15 (OxygenOS 15) அப்டேட் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Oneplus oxygenos 15 update news thumbnail
ஒன்பிளஸ் ஆக்சிஜன்OS 15 அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டு, அது கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. (OnePlus India)

By ETV Bharat Tech Team

Published : 4 hours ago

ஒன்பிளஸ் (Oneplus) நிறுவனம் தங்களின் ஸ்மார்ட்போன்களுக்கான இயங்குதள புதுப்பிப்பை (OS Update) அறிவித்துள்ளது. அதன்படி, ஆண்ட்ராய்டு 15 (Android 15) அடிப்படையிலான ஆக்சிஜன்OS 15 பீட்டா (OxygenOS 15 Beta) பதிப்பை நிறுவனம் வெளியிட்டது. அந்தவகையில், எந்தெந்த நேரத்தில் எந்த வகை ஒன்பிளஸ் போன்களுக்கு இந்த புதுப்பிப்புகள் கிடைக்கும் என்பதையும் தெரிவித்துள்ளது.

பல புதிய சிறப்புமிக்க அம்சங்களை ஒன்பிளஸ் இந்த இயங்குதள புதுப்பிப்பின் வாயிலாக தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவதாக வெளியீட்டு நிகழ்வில் தெரிவித்தது. முக்கியமாக AI (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான பல மேம்பட்ட அம்சங்கள், பெரிய இடத்தை கவராத எளிதான இயங்குதளம் என ஏராளமான அம்சங்கள் இந்த புதுப்பிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன்OS 15 அப்டேட் கிடைக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் எவை?

என்றுமுதல் எந்தெந்த போன்கள்
அக்டோபர் 30

ஒன்பிளஸ் 12,

ஒன்பிளஸ் 12R,

ஒன்பிளஸ் 12R (Genshin Impact Edition)

நவம்பர்

ஒன்பிளஸ் ஓபன்,

ஒன்பிளஸ் பேட் 2

டிசம்பர்

ஒன்பிளஸ் 11 5ஜி,

ஒன்பிளஸ் 11R 5ஜி,

ஒன்பிளஸ் நார்டு 4,

ஒன்பிளஸ் நார்டு CE 4,

ஒன்பிளஸ் நார்டு CE 4 லைட் 5ஜி,

ஒன்பிளஸ் பேட்

ஜனவரி 2025

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி,

ஒன்பிளஸ் 10T 5ஜி,

ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி

பிப்ரவரி 2025

ஒன்பிளஸ் 10R 5ஜி,

ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி

ஆக்சிஜன்OS 15 அம்சங்கள்:

மாற்றியமைக்கக்கூடிய லாக் திரை (Lock Screen Customizations): பயனர்கள் இனி எளிதாக லாக் திரையில் இருக்கும் ஐகான்கள், நோட்டிஃபிக்கேஷன்கள், படங்கள் என அனைத்தையும் மாற்றியமைக்க முடியும். இது சற்றே ஆப்பிள் ஐபோன்களில் இருக்கும் iOS போன்ற தோற்றத்துடன் இருக்கிறது.

மாற்றியமைக்கப்பட்ட குவிக் செட்டிங்ஸ் பேனல் (Quick Settings Panel): இதுவும் iOS தோற்றத்திலேயே இருக்கிறது. வட்ட வடிவிலான ஐகான்கள் (icons) சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் நோட்டிஃபிக்கேஷன்ஸ் இருக்காது. இதற்காக ஐபோன் போன்று நீங்கள் இடது பக்கத் திரையில் இருந்து ஸ்வைப் செய்ய வேண்டும்.

ஒன்பிளஸ் ஆக்சிஜன்OS 15 அம்சங்கள் (OnePlus India)

AI அம்சங்கள்: புகைப்படங்களை இன்னும் தெளிவாகப் பயன்படுத்த பல AI அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. AI அன்பிளர் (AI unblur), ரிப்ளெக்‌ஷன் எரேசர் (Reflection Eraser), டீட்டெயில் பூஸ்ட் (Detail Boost) போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் தேவையில்லாத நிழல்கள், ஒளியின் பிரதிபலிப்புகள் போன்றவற்றை அழித்து, புகைப்படங்களுக்கு கூடுதல் அழகைச் சேர்க்க முடியும்.

பேரலல் அனிமேஷன்ஸ் (Parallel Animations): மொபைல் செயலிகளின் ஐகான்களுக்கு கூடுதல் அனிமேஷன் சேர்க்கப்பட்டுள்ளது. இதை பேரலல் அனிமேஷன் என்றழைக்கும் ஒன்பிளஸ், ஒரே நேரத்தில் 20 செயலிகள் வரை கையாளும் திறன் இந்த பயன்பாட்டிற்கு இருப்பதாகக் கூறியுள்ளது.

இதையும் படிங்க
  1. வாட்ஸ்ஆப் அப்டேட்: தொடர்புகள் இணைப்பதை எளிதாக்கிய மெட்டா!
  2. பிஎஸ்என்எல் 5ஜி ரெடி? புதிய லோகோ உடன் ஏழு சூப்பர் திட்டங்கள்!
  3. புதிய அப்டேட் கொடுத்து; பெரிய அப்டேட்டை தள்ளிப்போட்ட சாம்சங்! One UI 7.0 தகுதியான போன்கள் எவை?

ஓபன் கேன்வாஸ் (Open Canvas):மடிக்கக்கூடிய பிளிப் மற்றும் ஃபோல்டு போன்களில் வரும் திரைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட செயலிகள் பயன்படுத்தும் திறனையும், அதனை சிறப்பாக கையாளவும் ஆக்சிஜன்OS 15-இல் ஓபன் கேன்வாஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

ஆக்சிஜன்OS 15 ஓபன் கேன்வாஸ் அம்சம் (OnePlus India)

ஒன்பிளஸ் அறிமுகம் செய்துள்ள புதிய ஆக்சிஜன்OS 15 இயங்குதள பதிப்பின் அவசியமான பயனர் சிறப்பு அம்சங்கள், பயன்பாட்டின் அடிப்படையிலேயே தெரியவரும்.

தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்குஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி'பக்கத்துடன் இணைந்திருங்கள்.

ABOUT THE AUTHOR

...view details