விவோ வி50 (Vivo V50) மொபைலை, நிறுவனம் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. மெல்லிய வடிவமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், Zeiss லென்ஸ் கேமரா நிறுவப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு அம்சமாக ஐபி68, ஐபி69 ஆகிய தரக்குறியீடுகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதில் 6,000mAh பேட்டரி 90 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் இருக்கிறது. புதிய விவோ போனில், பல செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக சர்க்கில் டூ செர்ச், அழைப்புகளின்போது நேரலையில் மொழிபெயர்ப்பு, ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட், ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் போன்ற அம்சங்கள் உள்ளன. இதன் கூடுதல் விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.
விவோ வி50 அம்சங்கள்:
விவோ வி50 போனில் 6.77-அங்குல குவாட்-கர்வ்டு அமோலெட் டிஸ்ப்ளே, டைமண்டு ஷீல்டு கண்ணாடி பாதுகாப்புடன், முழுஅளவு எச்டி+ ரெசலியூஷன், 120Hz ரெப்ரெஷ் ரேட், பீக் பிரைட்னஸ் 4,500 நிட்ஸ், பி3 வைட் கலர் கேமட் போன்ற சிறப்புகளைக் கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் 12ஜிபி LPDDR4X ரேம், 512ஜிபி வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜ் இணக்கமாக செயல்படும்.
Inspired by the starlit sky, the new vivo V50 Starry Night is coming to take you to the stars. Ready to get mesmerised?
— vivo India (@Vivo_India) February 10, 2025
Launching on 17th February at 12 PM.#vivoV50 #ZEISSPortraitSoPro pic.twitter.com/f5H7tV5wlG
பின்பக்கம் இரட்டை கேமராவுடன் வரும் விவோ வி50 ஸ்மார்ட்போனில், முதன்மை சென்சாராக 50 மெகாபிக்சல், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றொன்று 50 மெகாபிக்சல் அல்ட்ராவைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகும். இந்த லென்ஸுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட Zeiss (கேமரா லென்ஸுகளுக்கான முன்னணி நிறுவனம்) தொழில்நுட்பத்துடன் இணைந்து கட்டமைக்கப்பட்டது.
புதிய வி சீரிஸ் ஸ்மார்ட்போனை திறன்பட இயக்க 6,000mAh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இதை வேகமாக சார்ஜ் செய்ய 90 வாட்ஸ் பிளாஷ் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்படுகிறது. மேலும், ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஃபன்-டச் ஓஎஸ் 15 இயங்குதளம் இதில் நிறுவப்பட்டுள்ளது. கூடுதலாக தொடுதிரையில் கைரேகை சென்சார், ப்ளூடூத் 5.4 இணைப்பு போன்ற ஆதரவுகளும் உள்ளன.
விவோ வி50 விலை மற்றும் சலுகைகள்:
விவோ வி50 போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வகை ரூ.34,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முறையே 8ஜிபி + 256 ஜிபி விலை ரூ.36,999 ஆகவும், 12ஜிபி + 512 ஜிபி விலை ரூ.40,999 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் நாள்? எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா திட்டம்! |
இந்த போனை வாங்கும்போது, பயனர்களுக்கு 10 விழுக்காடு கேஷ்பேக் அல்லது 10 விழுக்காடு நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட வங்கிகளின் கடன் அட்டைகள், டெபிட் கார்டுகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் அறிமுக சலுகையாக விவோ 3இ இயர்பட்ஸை ரூ.1,499 எனும் விலையில் வாங்கலாம். மொபைலுடன் இதை வாங்கும்போது இந்த சலுகை விலையில் ப்ளூடூத் இயர்பட்ஸை வாங்கலாம். இது தற்போது ரூ.1,999 என்ற விலைக்குறிப்புடன் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.