புதுடெல்லி/நியூயார்க்: இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர் நிதி உதவி கொடுப்பதற்கு முடிவு எடுத்த முந்தைய பைடன் அரசு மீது டொனால்டு டிரம்ப் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஃபுளோரிடாவில் நடைபெற்ற எஃப்ஐஐ முதன்மை உச்சி மாநாட்டில் டொனால்டு டிரம்ப் இந்த கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்த வீடியோவும் வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பேசியுள்ள டிரம்ப்,"இந்தியாவில் வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதற்கு நாம் 21 மில்லியன் டாலர் செலவழிப்பதற்கு என்ன தேவை இருக்கிறது? இந்தியாவில் வேறு யாரையாவது தேர்ந்தெடுக்க இந்த நிதியை பெற்றிருக்கலாம். இது அமெரிக்காவின் நிலையை மேம்படுத்துவதற்காக திடீரென மேற்கொள்ளப்பட்ட முடிவு என்று இந்திய அரசிடம் நாம் சொல்ல வேண்டும்,"என்றார்.
மேலும் "இந்தியாவின் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து முன்பு கேள்வி எழுப்பியிருந்த அதிபர் டொனால்டு டிரம்ப்,"உலக அளவில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. அந்த நாட்டின் வரிகள் மிகவும் அதிகம்,"என்றும் கூறியிருக்கிறார்.
#WATCH | Miami, Florida | Addressing the FII PRIORITY Summit, US President Donald Trump says, " ... why do we need to spend $21 million on voter turnout in india? i guess they were trying to get somebody else elected. we have got to tell the indian government... this is a total… pic.twitter.com/oxmk6268oW
— ANI (@ANI) February 20, 2025
இதையும் படிங்க: டெல்லி முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ரேகா குப்தா.. பிரதமர் மோடி பங்கேற்பு!
ஃபுளோரிடாவின் மார்-எ-லாகோ ரிசார்ட்டின் நிர்வாக உத்தரவில் 18 ஆம் தேதி கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "இந்த விஷயத்தில் உலகில் நம்மை விடவும் அதிக வரியை விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. அவர்களின் வரிகள் மிகவும் அதிகம் இருக்கிறது என்பதால் அதில் இருந்து நமக்கு கொஞ்சம் தான் கிடைக்கிறது,"என்று கூறியிருந்தார்.
இந்தியாவுக்கு இந்த ஆண்டு 21 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படுவதை அமெரிக்க அரசின் திறன் துறையானது ரத்து செய்த சில நாட்கள் கழித்து இந்த விமர்சனத்தை டிரம்ப் முன்வைத்துள்ளார். எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் திறன் துறையானது கடந்த 16ஆம் தேதி இந்தியாவுக்கு வழங்கும் நிதி உதவியை ரத்து செய்தது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவில், பல்வேறு வெளிநாடுகளுக்கு உதவும் திட்டம் தேவையற்றது என்று அமெரிக்க அரசின் திறன் துறை கூறியிருந்தது. "அமெரி்க்கர்கள் வரியாக அளிக்கும் டாலர்களை கீழ்க்கண்ட வகைகளில் செலவிடப்படுவது அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது," என அமெரிக்க திறன் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வங்கதேசத்தின் அரசியல் பரப்பை வலுப்படுத்துவதற்கான 29 மில்லியன் டாலர் நிதி உதவி, இந்தியாவின் வாக்கு சதவிகிதத்தை அதிகரிப்பதற்கான 21 மில்லியன் டாலர் நிதி உதவி உளிட்டவை ரத்து செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.