ETV Bharat / education-and-career

ஜேஇஇ மெயின் 2025: ஆன்லைன் பதிவுக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி கடைசி நாள்! - JEE MAIN 2025

ஜேஇஇ மெயின் 2025 (அமர்வு 2) க்கான ஆன்லைன் பதிவுகள் பிப்ரவரி 25 ஆம் தேதியுடன் முடிவடைகிறது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2025, 6:34 PM IST

Updated : Feb 21, 2025, 7:39 PM IST

டெல்லி: JEE மெயின் 2025 (அமர்வு 2)-க்கான ஆன்லைன் பதிவுகள் பிப்ரவரி 25 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு பிப்ரவரி 25, இரவு 9 மணி வரையும், கட்டணங்களை செலுத்துவதற்கு இரவு 11:50 மணி வரை மட்டுமே செலுத்த முடியும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்கள் மற்றும் வழிமுறைகளுக்கு https://jeemain.nta.nic.in/information-bulletin/ என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.

இது குறித்து, CSAB 2025- ன் தலைவர் பேராசிரியர் கே. உமாமகேஷ்வர் ராவ் கூறுகையில், “நாட்டின் திறமையான மாணவர்களை JEE முதன்மை 2025 தேர்வில் பதிவு செய்ய ஊக்குவிக்கிறேன். இந்த மதிப்புமிக்க தேர்வில் வெற்றி பெறுவது வாழ்க்கையை மாற்றும் சாதனையாக இருக்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

JEE முதன்மை தேர்வுக்கான தகுதிகள்:

வயது வரம்பு : JEE (மெயின்) 2025 தேர்வை எழுதுபவர்களுக்கு வயது வரம்பு இல்லை.

JEE தகுதித் தேர்வுகள்: விண்ணப்பதாரர்கள் 2023, 2024 ஆம் ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 2025 ஆம் ஆண்டில் தேர்வெழுதியிருக்க வேண்டும். இந்த தேர்விற்கும், 12 ஆம் வகுப்பு, PU, NDA, NIOS, IB மாணவர்கள் தகுதியானவர்களாவர். மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஜேஇஇ மெயின் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: மருத்துவப் பணியாளர் தேர்வாணயம்: 2,642 பேருக்கு 26-ஆம் தேதி பணிநியமனம்

இருக்கை ஒதுக்கீடு:

இந்தியாவில் உள்ள NIT-களில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 24,000 இடங்கள் நிரப்பப்படுகின்றன. 2025 ஆம் ஆண்டில், NEUT பிரிவின் கீழ் 740 இடங்களுடன், NE மாநிலங்களில் NIT அமைப்பிற்கான மாநில ஒதுக்கீட்டின் கீழ் தோராயமாக 2,000 இடங்கள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CSAB-NEUT சுற்று: இந்தியா முழுவதும் உள்ள AICTE-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில், தொழில்நுட்பக் கல்வி வசதிகள் குறைவாக உள்ள NE மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

CSAB சிறப்புச் சுற்று: JoSAA/CSAB கவுன்சிலிங் மூலம் இடம் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு NIT+ நிறுவனங்களில் சேர்க்கை பெற கூடுதல் வாய்ப்பை வழங்குகிறது.

மொழி விருப்பம்: JEE முதன்மைத் தேர்வு ஆங்கிலம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

ஒதுக்கீடு செயல்முறை: JEE முதன்மை தேர்வில் தகுதிபெறும் மாணவர்கள், அதிகாரப்பூர்வ இணையதளம் (https://josaa.nic.in மற்றும் https://csab.nic.in) மூலம் கவுன்சிலிங் பங்கேற்கலாம். இதில், பதிவு, ஆவண சரிபார்ப்பு, விருப்பத்தேர்வு, கவுன்சிலிங் அட்டவணைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.

Last Updated : Feb 21, 2025, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.