டோக்கியோ:ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் ஒன், விண்ணில் செலுத்திய ராக்கெட் ஏவப்பட்ட நில விநாடிகளில் வெடித்து சிதறியது. மத்திய ஜப்பானின் வக்கயமா மாகாணத்தில் ஸ்பேஸ் ஒன் என்ற விண்வளி ஆராய்ச்சி ஸ்டார்ட் அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்த ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தியது. கிளம்பிய சில விநாடிகளில் ராக்கெட் வானில் வெடித்து சிதறியது. ராக்கெட் வெடித்து சிதறிய கரும்புகை வெளியேறியும், தண்ணீர் பீய்ச்சி அடித்து நெருப்பை அணைக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
ஏற்கனவே பலமுறை இந்த ராக்கெட் ஏவுவதற்கு திட்டமிடப்பட்ட போதும் அவை தள்ளிப்போனது. கடைசியாக கடந்த சனிக்கிழமை ராக்கெட்டை விண்ணில் செலுத்த நிறுவனம் திட்டமிட்ட போதும் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக தள்ளிப்போனதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ராக்கெட் ஏவப்பட்ட சில விநாடிகளில் வானிலேயே வெடித்து சிதறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் யாருக்கேனும் காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.