ETV Bharat / technology

இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பிய என்.வி.எஸ்-02; இதன் முக்கியத்துவம் தெரியுமா? - ISRO ROCKET LAUNCH

இஸ்ரோ GSLV-F15 ராக்கெட் உதவியுடன், வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய என்.வி.எஸ்-02 செயற்கைக்கோளுக்கு என தனிச் சிறப்புகள் உள்ளன.

NVS-02 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்படும் GSLV-F15 ராக்கெட்
NVS-02 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்படும் GSLV-F15 ராக்கெட் (ISRO)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 29, 2025, 3:41 PM IST

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), GSLV-F15 ராக்கெட்டுடன் இணைக்கட்ட NVS-02 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, இந்திய நேரப்படி காலை 6:23 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

சதீஷ் தவானின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து தான் ஜி.எஸ்.எல்.வி., எஃப்15 ராக்கெட் விண்ணில் பாய்ச்சப்பட்டது. இதில் எடுத்து செல்லப்பட்ட NVS-02 (என்.வி.எஸ்-02) செயற்கைக்கோள் 2,250 கிலோ எடை கொண்டதாகும். நாட்டின் தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்தை மேம்படுத்தும் நேவிக் (NavIC - Navigation with Indian Constellation) திட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

GSLV-F15 கடந்து செல்லும் பாதை
GSLV-F15 கடந்து செல்லும் பாதை (ANI)

சரியான வழித்தடங்களை அமைக்க உதவும் இந்த செயற்கைக்கோள், நேவிகேஷன் சேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போது பூமியில் இருந்து 322.93 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள புவிவட்ட பாதையில் என்.வி.எஸ்-02 நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

என்.வி.எஸ்-02 சிறப்பம்சங்கள் என்ன?

வழி அமைப்புகளைக் கண்காணிக்கும் (நேவிகேஷன்) ஐந்து செயற்கைக்கோள்களில் இரண்டாவது செயற்கைக்கோளான NVS-02, ரூபிடியம் அணு அதிர்வெண் தரநிலையை (RAFS) கொண்டுள்ளது. RAFS என்பது ஒரு அணு கடிகாரமாகும். இது சரியான நேவிகேஷன் திறனை வெளிப்படுத்த செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக NVS-02 செயற்கைக்கோளிலும் துல்லியமான நேர மதிப்பீட்டிற்காக இவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

NavIC (Navigation with Indian Constellation) என்பது இந்தியாவும், அதனை சுற்றியுள்ள 1,500 கிமீ வரையிலான பகுதிகளுக்கும் துல்லியமான நிலை, வேகம், மற்றும் நேர (PVT) சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பாகும்.

NavIC இரண்டு விதமான சேவைகளை வழங்குகிறது:

எஸ்.பி.எஸ் சேவை 20 மீட்டர் அளவிலான துல்லியமான நிலைத் தகவல்களையும், 40 நானோ நொடிகள் (nanoseconds) அளவிலான நேர துல்லியத்தையும் வழங்குகிறது. NavIC அமைப்பை மேம்படுத்த, NVS-01, NVS-02, NVS-03, NVS-04, NVS-05 ஆகிய ஐந்து இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோள்கள் புவிவட்ட பாதையின் ஜியோசிங்குரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட் (Geosynchronous Transfer Orbit) பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இவை NavIC சேவைகளின் துல்லியத்தையும் பயனையும் அதிகரிக்கும் வகையில் செயல்படும்.

  1. Standard Positioning Service (SPS) - எஸ்.பி.எஸ் எனப்படும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நிலையான சேவை
  2. Restricted Service (RS) - ஆர்.எஸ். எனப்படும் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கான சேவை

NavIC பயன்பாடுகள்

நேவிக் (NavIC), இந்தியாவின் உள்நாட்டு வழிகாட்டி தொழில்நுட்பமாக, எதிர்காலத்தில் மேலும் அதிக துல்லியத்துடன் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

NavIC பல்வேறு துறைகளில் பயன்படும்:

  • போக்குவரத்து - நிலம், வானகம், மற்றும் கடல் போக்குவரத்துக்கு தேவையான வழி அமைப்புகளை மேம்படுத்தும்
  • ஜி.பி.எஸ்-க்கு மாற்றாகப் பார்க்கப்படுகிறது
  • மொபைல் போன் சேவைகளை மேம்படுத்த உதவும்
  • இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை தொடர்ச்சியாகக் கண்காணிக்க முடியும்
  • நில அளவுகளை துல்லியமாக மேற்கொள்ளவும், அவற்றை ஆய்வுகளுக்கு உட்படுத்தவும் முடியும்
  • காலநிலை மாற்றங்கள் கணிக்கும் வகையிலான துல்லிய நேர அமைப்பைப் பெற முடியும்.
  • பேரழிவுகள் மற்றும் அவசர நிலை செய்திகளை அனுப்பவும் இந்த NavIC அமைப்பு உதவும்

GSLV-NVS02 விண்ணில் செலுத்தப்பட்ட பின் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வருடத்தின் முதல் நகர்வாக ஜி.எஸ்.எல்.வி-எஃப்15 உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்ட என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘மேக் இன் இந்தியா’ தெரியும்; அதென்ன ‘மேக் இன் ஸ்பேஸ்’-இல் செயற்கை இதயம்?

இஸ்ரோ ஆறு தலைமுறை ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. முதலாவது, SLV-3 E1/ரோஹினி, பேராசிரியர் சதீஷ் தவான் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் திட்ட இயக்குநராக இருந்த 1979-ஆம் ஆண்டில் அவரது வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது.

"அதிலிருந்து, இன்று வரை, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளங்களிலிருந்து 100 முறை ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டு, 548 செயற்கைக்கோள்களை புவி சுற்றுப்பாதைக்கு அனுப்பியுள்ளோம். 23 டன் எடை கொண்ட (2300 கிலோ) 433 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உள்பட மொத்தம் 120 டன் எடையுள்ள பொருள்களை தாங்கிச் சென்றுள்ளது நம் ராக்கெட்டுகள்," என்று தெரிவித்தார் நாராயணன்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக்க உதவிய அரசியல் தலைவர்களுக்கும் தன் நன்றியை நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், விண்ணில் செலுத்தப்பட்ட என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் இருக்கும் இடத்தை தொடர்ந்து கண்காணித்து, சரியான இடத்தில் அதை நிலை நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.