தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

வரலாறு படைத்த ஸ்ரீஹரிகோட்டா...100-வது செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சாதனை! - SRIHARIKOTA 100TH LAUNCH

இஸ்ரோவின் 100-வது மைல்கல்லான என்விஎஸ்-02 செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையம்
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 19 hours ago

ஹைதராபாத்:பிஎஸ்எல்வி சி-60 (PSLV C-60) வெற்றியை தொடர்ந்து என்விஎஸ்-02 (NVS -02) ஜனவரியில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கடந்த டிசம்பர் 2024-ல் அறிவித்திருந்தார். அதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (SDSC) இருந்து, என்விஎஸ்-02 செயற்கைக்கோள் (Satellite) ஜிஎஸ்எல்வி (Geosynchronous Satellite Launch Vehicle-GSLV) மூலம், நேற்று (ஜனவரி 08) புதன்கிழமை விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

அதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் (SDSC) தனது 100வது ராக்கெட் ஏவுதள மைல்கல்லை அடைந்துள்ளது.

சதீஷ் தவான் விண்வெளி மையம் (SDSC):

சதீஷ் தவான் விண்வெளி மையம் (Satish Dhawan Space Centre ) இந்தியாவின் முதன்மை விண்வெளி நிலையமாகும். இந்த மையம், ஆந்திர மாநிலம் கிழக்குக் கடற்கரையில், சென்னைக்கு வடக்குப் பகுதியில் சுமார் 80 கி.மீ தொலைவில், நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டையில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா தீவில் அமைந்துள்ளது. சுமார் 43 ஆயிரத்து 360 ஏக்கர் (175 சதுர கி.மீ) பரப்பளவைக் கொண்ட இந்த தீவில், செயற்கைக்கோள் நிறுவுவதற்கு நிலையம் அமைக்க கடந்த 1969-ல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய இயற்பியலாளர் விக்ரம் சாராபாய் இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சியைத் தொடங்கியபோது, சதீஷ் தவான் விண்வெளி மையம் (SDSC SHAR) உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவரான பேராசிரியர் சதீஷ் தவானின் நினைவாக, 'சதீஷ் தவான் விண்வெளி மையம்' (Satish Dhawan Space Centre, SDSC) என செப்டம்பர் 5, 2002-ல் பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குக்கிராமத்தில் பிறந்து இஸ்ரோவின் தலைவராக உருவெடுத்த நாராயணன்! அரசுப் பள்ளி மாணவன் சாதனை நாயகன் ஆன வரலாறு!

பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதினால், SHAR என்றும் அழைக்கப்படும் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளமாக மாற்றியதற்கு முக்கிய காரணமாகும். சதீஷ் தவான் விண்வெளி மையம் தனது 99 ராக்கெட்டாக கடந்த 2024 டிசம்பரில் பிஎஸ்எல்வி சி-60 (PSLV C-60) விண்ணில் செலுத்தியது.

1980 - 2020 களில் விண்ணில் ஏவப்பட்ட முக்கிய செயற்கைக்கோள்கள்:

  • 18.07.1980: இந்தியாவின் முதல் சோதனை செயற்கைக்கோளான ரோகிணி (RS-1), செயற்கைக்கோள் ஏவு வாகனம்-3 (SLV-3E2) சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
  • 15.10.1994: பிஎஸ்எல்வி- டி2 ஐஆர்எஸ்-பி2 (PSLV-D2 IRS-P2)
  • 21.03.1996: பிஎஸ்எல்வி- டி3 ஐஆர்எஸ்-பி3 (PSLV-D3 IRS-P3)
  • 18.04.2001: GSLV-D1 (Geosynchronous Satellite Launch Vehicle)-ன் முதல் விமான சோதனை 1,540 கிலோ எடையுள்ள GSAT-1 செயற்கைக்கோளை, புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப்பாதையில் (GTO) வெற்றிகரமாக நிலை நிறுத்தியுள்ளது.
  • 22.10.2008: சந்திரயான்-1, PSLV-C11 -ல் ஏவப்பட்டுள்ளது.
  • 09.09.2012: இஸ்ரோவின் 100-வது Mission: PSLV-C21 இரண்டு வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.
  • 15.02.2017: PSLV-C37 ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை ஏவி சாதனை படைத்தது
  • 22.07.2019: சந்திரயான்-2 GSLV MkIII-M1 மூலம் சந்திரனுக்கு ஏவப்பட்டுள்ளது
  • 14.07.2023: சந்திரனில் இந்தியாவின் முதல் தரையிறக்கத்தை அடைய சந்திரயான்-3 ஏவப்பட்டுள்ளது
  • 02.09.2023: சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் அறிவியல் பயணமான ஆதித்யா-L1 ஏவப்பட்டுள்ளது.
  • 01.01.2024: கருந்துளைகளை ஆய்வு செய்ய XPoSat ஏவப்பட்டுள்ளது.
  • 30.12.2024: விண்வெளி டாக்கிங் பரிசோதனை (SpaDeX) பணி தொடங்கப்பட்டது, இதில் SDX01 மற்றும் SDX02 ஆகிய இரண்டு சிறிய செயற்கைக்கோள்கள் 24 செயற்கைக்கோள்களுடன் சுமந்து சென்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details