ETV Bharat / state

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான கொலை மிரட்டல் வழக்கு: 22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு! - MA SUBRAMANIAN CASE JUDGEMENT

சென்னை மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களைத் தாக்கியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று (ஜனவரி 10) தீர்ப்பளிக்கிறது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

சென்னை: சென்னை மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களைத் தாக்கியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று (ஜனவரி 10) தீர்ப்பளிக்க உள்ளது.

2002ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம், அப்போதைய துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, சென்னை கண்ணப்பன் திடல், மீன் அங்காடி டெண்டர் தொடர்பாகப் பிரச்சினையை எழுப்பியது. அதில், அதிமுக உறுப்பினர்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் மைக், பிளஸ்டிக் நாற்காலி உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு தாக்கியதில், அதிமுக மாமன்ற உறுப்பினர்களாக இருந்த ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்கரசி, குமாரி, உள்ளிட்ட பலருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக, அதிமுக மன்ற உறுப்பினர்கள் சுகுமார் பாபு மற்றும் மாநகராட்சி மன்ற செயலாளர் ரீட்டா ஆகியோர் சென்னை பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், செல்வி சௌந்தர்யா, கிருஷ்ணகிரி மூர்த்தி ஆகிய ஏழு பேருக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. (சம்பவம் நடைபெறும் போது குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள்).

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கு; அமலாக்கத்துறை கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல்..! -

அதில், கலகம் செய்யும் நோக்கில் சட்டவிரோதமாகக் கூடுதல், சட்டவிரோதமாக ஒருவரைத் தடுத்துவைத்தால், ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல், கொலை மிரட்டல், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இவ்வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணை நடைபெற்றது.

அப்போது, காவல்துறை தரப்பில் 70க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கில் நீதிபதி ஜெயவேல் இன்று (ஜன.10) தீர்ப்பு வழங்குகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.