சென்னை: பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் நேற்று காலமானார். திரை இசை உலகில் ரசிகர்களை 60 ஆண்டு காலம் தனது காந்த குரலால் கட்டிப்போட்ட பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் கேரளாவில் நேற்று (ஜன.09) காலமானார். அவருக்கு வயது 80.
புற்றுநோய்காக கேரளா மாநிலம் திரிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அனைத்து வகை உணர்வுகளையும் தனது குரலால் கடத்திய ஜெயச்சந்திரன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 16000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
சிறந்த பின்னணி பாடகருக்காக தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, 4 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தமிழக அரசின் விருது , 5 முறை கேரள அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருது என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
Rest in peace 😭💔 One of my most favorite singers #Jayachandran sir 💔
— Nammavar (@nammavar11) January 9, 2025
P. Jayachandran(80) sir has sung more than 15,000 songs in Malayalam, Tamil, Telugu, Kannada & Hindi
தாலாட்டுதே வானம் 💔#KamalHaasan pic.twitter.com/QJcI3SEwWO
1944ஆம் ஆண்டு கேரளாவின் எர்ணாகுளத்தில் பிறந்த ஜெயச்சந்திரன், இளையராஜா, ஏஆர் ரகுமான் ஆகியோரது இசையில் ஏராளமான வெற்றிப் பாடல்கள் பாடியுள்ளார். காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி, ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மனதில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கும் என்றால் அது மிகையாகாது. கடைசியாக அஜித் நடித்த கிரீடம் படத்தில் 'கனவெல்லாம்' எனற பாடலை பாடியுள்ளார்.
இதையும் படிங்க: 2024 இல் உலகளவிலான திரைப்பட ரசிகர்கள் கொண்டாடிய தமிழ் படங்கள் பட்டியல் இதோ! - TAMIL MOVIES LETTERBOXD 2024
இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயச்சந்திரன், கமல்ஹாசன் படத்தில் பாடிய ’தாலாட்டுதே வானம்’ பாடல் மிகவும் பிரபலமடைந்தது. ஜெயச்சந்திரன் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 16000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.