பல மொபைல் போன் நிறுவனங்கள் இந்தியாவில் வந்துபோனாலும், அப்படியே போகாமல் திரும்பிவந்து தங்களை நிலைநிறுத்திக் கொண்டு நிரூபித்துக் காட்டியது லாவா நிறுவனம். இவர்களின் அக்னி ஸ்மார்ட்போன்கள் சந்தையில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இப்போது, புதிய லாவா அக்னி 3 5ஜி (Lava Agni 3 5G) மொபைலை அறிமுகம் செய்துள்ளனர்.
மேம்பட்ட கேமராக்கள், முன்பக்கம் பின்பக்கம் என இரண்டு அமோலெட் திரைகள், டெலிஃபோட்டோ லென்ஸ், 66W திறனுடன் வரும் வேகமான சார்ஜிங் வசதி, 5,000 mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்கள் லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.
கவனிக்க வேண்டிய சிறப்புகள்:
- சிறந்த திரை: 6.78-அங்குல (இன்ச்), 1.5K ரெசல்யூஷன், 120 Hz ரெப்ரெஷ் ரேட், வைட்வைன் எல்1 ஆதரவுடன் வரும் வளைந்த 3டி அமோலெட் எச்டிஆர் (HDR) திரை. பின்பக்க கேமரா அமைப்புடன் சின்ன அமோலெட் திரை பொருத்தப்பட்டுள்ளது.
- சூப்பர் கேமரா: 50 மெகாபிக்சல் சோனி கேமரா OIS ஆதரவுடன் முதன்மை சென்சார் ஆகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் சென்சாரும், ஒரு 3x டெலிபோட்டோ லென்ஸும் இணைக்கப்பட்டுள்ளன.
- திறன்மிக்க சிப்செட்: இந்த விலை ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் முதன்மையான சிறந்த சிப்செட்டை லாவா இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீடியாடெக் டிமென்சிட்டி 7300x சிப்செட் லாவா அக்னி 3 5ஜி போனை இயக்குகிறது. இதனுடன் LPDDR5 ரேம், UFS 3.1 ஸ்டோரேஜ், பெரிய வேப்பர் சாம்பர் கூலிங் வழங்கப்பட்டுள்ளன. இதே சிப்செட்டை நீங்கள் மடிக்கக்கூடிய மோட்டோரோலா ரேசர் 50 (Motorola Razr 50 Foldable Phone) ஸ்மார்ட்போனின் பார்த்திருப்பீர்கள்.
- ஆக்ஷன் பட்டன்: பயனர்கள் ஐபோன்களில் காணும் ஆக்ஷன் பட்டனை, லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனிலும் காண முடியும். இதனை வைத்து பல செயலிகளை திறக்கவும், பல செயல்பாடுகளை மேற்கொள்ளவும் முடியும்.
லாவா அக்னி 3 5ஜி விலை:
லாவா அக்னி 3 5ஜி போன் வகைகள் | விலை |
8ஜிபி ரேம் / 128ஜிபி ஸ்டோரேஜ் (சார்ஜர் இல்லாமல்) | ரூ.20,999 |
8ஜிபி ரேம் / 128ஜிபி ஸ்டோரேஜ் (66W சார்ஜர் உடன்) | ரூ.22,999 |