டெக் சந்தையில் பல விதமான நேர்மறை மற்றும் எதிர்மறைக் கருத்துகளை எதிர்கொண்டுவரும் புதிய ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை (iPhone 16 Series sale) இன்று (செப்டம்பர் 20) இந்தியாவில் தொடங்கியது. இதனையடுத்து, காலைமுதல் ஐஓஎஸ் 18 இயங்குதளத்துடன் வரும் புதிய ஐபோன் 16 மாடல்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோர்களின் வெளியே வரிசையில் காத்திருக்கின்றனர். இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவுகிறது.
இந்த நேரத்தில் ஐபோன் 16 ஸ்மார்ட்போன்களின் விலை என்ன, ஆப்பிள் வழங்கும் டிரேட்-இன் (Trade-in) சலுகைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளவோம். புதிய ஐபோனை ஆப்பிள் ஸ்டோர்கள், அப்டிரோனிக்ஸ் (APTRONIX) போன்ற அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற பிற மல்டி பிராண்டட் ஸ்டோர்கள், ஆப்பிள் இந்தியா இணையதளம் போன்ற இடங்களில் இருந்து வாங்கலாம்.
ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் இந்திய விலை (Apple iPhone 16 series price in India):
கீழ் அமைக்கப்பட்டிருக்கும் அட்டைவணையில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் மற்றும் ரகங்களின் விலை விவரிக்கப்பட்டுள்ளது.
மாடல் | ஸ்டோரேஜ் | விலை | வங்கி சலுகை | சலுகை விலை |
ஆப்பிள் ஐபோன் 16 | 128ஜிபி | ரூ.79,900 | ரூ.5,000 | ரூ.74,900 |
256ஜிபி | ரூ.89,900 | ரூ.5,000 | ரூ.84,900 | |
ஆப்பிள் ஐபோன் 16 பிளஸ் | 128ஜிபி | ரூ.89,900 | ரூ.5,000 | ரூ.84,900 |
256ஜிபி | ரூ.99,900 | ரூ.5,000 | ரூ.94,900 | |
512ஜிபி | ரூ.1,19,900 | ரூ.5,000 | ரூ.1,14,900 | |
ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ | 128ஜிபி | ரூ.1,19,900 | ரூ.5,000 | ரூ.1,14,900 |
256ஜிபி | ரூ.1,29,900 | ரூ.5,000 | ரூ.1,24,900 | |
512ஜிபி | ரூ.1,49,900 | ரூ.5,000 | ரூ.1,44,900 | |
1டிபி | ரூ.1,69,900 | ரூ.5,000 | ரூ.1,64,990 | |
ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் | 256ஜிபி | ரூ.1,44,990 | ரூ.5,000 | ரூ.1,39,900 |
512ஜிபி | ரூ.1,64,900 | ரூ.5,000 | ரூ.1,59,900 | |
1டிபி | ரூ.1,84,900 | ரூ.5,000 | ரூ.1,79,900 |
ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் வங்கி சலுகைகள் மற்றும் கேஷ்பேக் ஆஃபர்கள் (Apple iPhone 16 series offers in India):
ஐபோன் 16 சீரிஸ் மொபைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (American Express), ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ ஆகிய வங்கி அட்டைகள் பயன்படுத்தினால், ரூ.5000 வரை உடனடி கேஷ்பேக் கிடைக்கும். கூடுதலாக, பெரும்பாலான முன்னணி வங்கிகள் 3 முதல் 6 மாதங்களுக்கு கட்டணமில்லா சுலப மாதத் தவணை (EMI) விருப்பங்களை வழங்குகிறது.