தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

விக்கிப்பீடியாவை விளாசும் எலான் மஸ்க்... ஹிட்லர் சல்யூட் சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் பரபரப்பு! - ELON MUSK ON WIKIPEDIA

விக்கிப்பீடியாவை பணமதிப்பு செய்ய வேண்டும் என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எலான் மஸ்க் (கோப்புப்படம்)
எலான் மஸ்க் (கோப்புப்படம்) (credit - AFP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2025, 3:58 PM IST

வாஷிங்டன்:விக்கிப்பீடியாவை பணமதிப்பு செய்ய வேண்டும் என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் எலான் மஸ்க் எக்ஸ் பக்கத்தில் ''சமநிலையை மீட்டெடுக்கும் வரை விக்கிப்பீடியாவுக்கு நன்கொடை அளிப்பதை நிறுத்தவேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு விக்கிப்பீடியாவின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸை சூடாக்கியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றியுள்ள ஜிம்மி வேல்ஸ் மஸ்கின் ட்வீட்டை டேக் செய்து பதிலடி கொடுத்துள்ளார்.

ஜிம்மி வேல்ஸ் தனது பதிவில், ''விக்கிப்பீடியா விற்பனைக்கு இல்லை என்பதில் எலான் மஸ்க் மகிழ்ச்சியடையவில்லை என்று நினைக்கிறேன். எங்களிடம் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான அவரது பிரச்சாரம் சத்தியத்தின் மீது அக்கறை கொண்டவர்களிடமிருந்து நிறைய நன்கொடைகள் வரும் என நான் நம்புகிறேன்'' என கூறியுள்ளார்.

உலகத்தில் மிக இரு சமூக ஊடக நிறுவனங்களை நடத்தி வரும் இருவருக்குள்ளும் வெடித்துள்ள இந்த பிரச்சனை பயனாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களால் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:இதையும் படிங்க: ‘மேக் இன் இந்தியா’ தெரியும்; அதென்ன ‘மேக் இன் ஸ்பேஸ்’-இல் செயற்கை இதயம்?

அதே சமயம் வாஷிங்டன்னில் நடந்த அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் நாஜி சல்யூட் அடித்ததாக சர்ச்சை எழுந்தது. யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் நாஜி படைகளின் சல்யூட்டை எலான் மஸ்க் அடித்ததாக பல்வேறு தரப்பினர் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சர்ச்சைக்கு மத்தியில் ஜிம்மி வேல்ஸை மஸ்க் தாக்கி பேசி வருவது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எலான் மஸ்க் விக்கிப்பீடியாவை தாக்கி பேசுவதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அர்தூர் என்பவர் பதிவில், ''விக்கிப்பீடியா முற்றிலும் கருத்தியல் ரீதியாக கைப்பற்றப்பட்டது. மீண்டும் சமநிலைப்படுத்தும் வரை விக்கிப்பீடியா $0 நன்கொடைகளுக்கு மட்டுமே தகுதியானது'' என குற்றம்சாட்டியிருந்தார். அந்த ட்வீட்டை டேக் செய்துதான் எலான் மஸ்க் ''சமநிலையை மீட்டெடுக்கும் வரை விக்கிப்பீடியாவுக்கு நன்கொடை அளிப்பதை நிறுத்தவேண்டும்'' என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details