ஹைதராபாத்: அதிவேகமாக தொழில்நுட்பம் வளர்ந்து வரும் அதே சமயத்தில், புத்தம்புது வழிகளில் சைபர் குற்றங்களும் (Cyber Crime) அரங்கேறுகின்றன. சமீபகாலமாக சிலர் பழைய செல்போன்களை வாங்கிக்கொண்டு ஸ்டீல் சமையல் பாத்திரங்களை வழங்கி வருகின்றனர். ‘என்னடா இது புதுசா இருக்கே?’ என்று எண்ண வேண்டாம். இவர்கள் லோடு ஆட்டோக்களில் சுற்றி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் பகுதியில் காவல்துறையினரால் இந்த நூதன சைபர் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஆட்டோக்களில் பாத்திரங்களுடன் வரும் நபர்களின் பேச்சை நம்பி பலர் பழைய போன்களை கொடுத்து சமையலறை பாத்திரங்களை வாங்கி வருகின்றனர். ஆனால் இப்படி பழைய போன்களை கொடுத்து சமையல் பாத்திரங்களை வாங்கும் முன் ஒருமுறை யோசிக்க வேண்டும் என்கின்றனர் காவல்துறையினர். ஏனெனில் இந்த செல்போன்கள் சைபர் மோசடி செய்பவர்களுக்கு விற்கப்படுகின்றன
வடக்கில் இருந்து இயங்கும் சைபர் குற்றவாளிகள்:
பீகாரில் சிலர் பழைய செல்போன்களை மாநிலத்தின் சில மாவட்டங்களில் இருந்து வாங்குகின்றனர். சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தேவ்கரில் இருந்து சைபர் குற்றவாளிகள் செயல்படுவதை சைபர் குற்றப்பிரிவு துறை கண்டறிந்தது. அதனைத் தொடர்ந்து ராமகுண்டத்தில் பீகாரைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைதுசெய்து 4 ஆயிரம் பழைய போன்களை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பலத் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க: அஜித்குமாரின் புதிய போர்ஷ் கார்; ஷாலினி இன்ஸ்டா பதிவு
விசாரணையில், தாங்கள் மொத்தமாக ஸ்மார்ட்போன்களை பழைய விலைக்கு முகவர்களிடம் இருந்து வாங்குவோம். பின்னர், அதில் இருக்கும் தகவல்களை திரட்ட முயற்சிப்போம். அதன்பின், கிடைக்கும் தகவல்களைக் கொண்டு சைபர் மோசடியில் ஈடுபடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளனர். இது சைபர் குற்றப்பிரிவு (Cyber Crime) காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.