'டாடா நானோ', அவரின் வெறும் வணிக சிந்தனையாக அது இருக்கவில்லை. ஏழை மக்களும், நான்கு சக்கர வாகனத்தில் மழை நனையாமல், வெயில் படாமல், ஏசி போட்டு காரில் செல்ல வேண்டும் என்று ரத்தன் டாடா எண்ணினார். அதனாலேயே, அவர் மறைந்தப் பிறகு, அவர் நானோவைக் குறித்து வெளிப்படுத்திய வார்த்தைகளில் இருந்து எழுந்த கற்பனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
விண்ணில் பரவிய நட்சத்திரங்கள் மங்கியிருந்த நேரமது. நிசப்தமான இரவு, வானம் வரைபடம் போலப் பரந்திருந்தது. மும்பையில் உள்ள தனது வீட்டின் மாடியில், ரத்தன் டாட்டா மெதுவாக நடைபோட்டார். வயதின் சுமை இப்போது அவரது புறங்களை சாய்த்திருந்தது. ஆனால், மனதில் அவர் இன்னும் இளமைதான். மூடுபனி இருளில் சற்றே மறைந்திருந்த காரை பார்த்தபோது, அவரது இதயம் 'என் கனவு கார்' என்று சற்றே மெருகேறியது.
ஒவ்வொரு பாகமும் அவரின் அன்பு, ஆசை, உழைப்பு ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது.
"மக்களுக்கான கார்... என் கனவுக்குள் பிறந்தது," என்று மெதுவாக தன்னுடைய மனதில் பேசினார். கண்கள் இமைக்காமல் அந்த வெள்ளை காரைப் பார்த்தார். ஒவ்வொரு பாகமும் அவரின் அன்பு, ஆசை, உழைப்பு ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது.
"நீ நிச்சயமாக சாதாரண காரல்ல. எல்லோருக்குமான ஒரு மகத்தான இலக்காக நீ இருப்பாய். ஒவ்வொருவரும் தனக்கென ஒரு கார் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பிரபலமான கார்களின் விலையால், பலருக்கு அது கனவாகவே இருந்து வந்தது. அதற்கு, உன்னால் நான் இன்று தீர்வு காணப் போகிறேன்.!"
நிழல்கள் மெல்ல இருளில் கரைந்தன. அவர் ஒரு காரை தாயைப் போல பார்த்தபோது, மனதில் பல நினைவுகள் வெள்ளம் போல வழிந்தோடின. அதற்கு 'நானோ' என்று பெயரும் வைத்துவிட்டார். "நீ என்னுடைய மக்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன். உன்னிடம் எல்லோரும் அடைய முடியாத ஒரு இலக்கை அடைய வேண்டிக் கேட்டேன். அதுபடியே என் கனவுகளில் இருந்த காராக, நீ (நானோ) உருவாக்கப்பட்டாய்."
ஆனால் நான் ஒருபோதும் பின்வாங்கவில்லை. நீ ஒரு தோல்வியாக இருந்தாலும், நான் உன்னைத் தோல்வி என்று பார்க்கவில்லை.