பல அற்புதங்கள் புவியில் பெருகிக் கிடக்கிறது என்றால், இதற்கு வெளியேயும் அதிசயங்கள் நிறைந்திருக்கிறது. அப்படி மக்களால் அதிசயித்து பார்க்கப்பட்ட ஒன்று தான் காமெட் (Comet). வானில் தெரிந்து இதை மக்கள் பிரம்மிப்புடன் வெறும் கண்களால் பார்த்து மகிழ்ந்தனர்.
காமெட் என்பது வால் நட்சத்திரம் என்று தமிழில் அறியப்படுகிறது. இது சூரியனைச் சுற்றி வரும் தூசி, பனி மற்றும் பாறை ஆகியவற்றால் ஆன ஒரு வான் அமைப்பு ஆகும். இதை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு ஆகிய பகுதியில் கண்ட மக்கள், புகைப்படங்களை எடுத்து தங்களின் எக்ஸ் (X, formely Twitter) தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
வியப்பில் மக்கள்:
ஆச்சரியமூட்டுவது என்னவென்றால், 80 ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை தான் இந்த நிகழ்வைக் காண முடியுமாம்! இன்னும் சில நாள்களுக்கு வெறும் கண்களால் இதைப் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு காமெட் சி/2023 ஏ3, வால் நட்சத்திரன் சுச்சின்ஷான்-அட்லாஸ் (Comet C/2023 A3, also known as Comet Tsuchinshan- ATLAS) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதை முதன்முதலில் சீனாவில் உள்ள சுச்சின்ஷான் ஆய்வகம் மற்றும் அட்லாஸ் சர்வே, செப்டம்பர் 27 அன்று சூரியனுக்கு மிக அருகில் பூமியை நோக்கி வந்துபோது கண்டுபிடித்தது. இது பூமியில் இருந்து 129.6 கிலோமிட்டர்கள் தொலைவில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.