தமிழ்நாடு

tamil nadu

ஆப்பிள் iOS 18 வரப்போகுது; அப்டேட் கிடைக்கும் ஐபோன் மாடல்களின் பட்டியல் வெளியீடு! - apple ios 18 supported iphones

By ETV Bharat Tech Team

Published : Sep 12, 2024, 10:20 AM IST

செப்டம்பர் 9 அன்று ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 16 மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. இதனுடன் நிறுவனம் அறிமுகம் செய்த ஐஓஎஸ் 18 (iOS 18) இயங்குதளம், எந்தெந்த ஐபோன்களுக்கு பொருந்தும் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆப்பிள் ஐஓஎஸ் 18
ஆப்பிள் ஐஓஎஸ் 18 (Credits: Apple)

Apple iOS 18: ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் புதிய ஆப்பிள் கேட்ஜெட்கள் வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து, செப்டம்பர் 16 ஆம் தேதி பழைய ஐபோன்களுக்கு புதிய ஐஓஎஸ் 18 (iOS 18) அப்டேட் கிடைக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதன்படி, மேம்படுத்தப்பட்ட புதிய இயங்குதளத்தில் பல செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை நிறுவனம் ‘ஆப்பிள் இன்டலிஜென்ஸ்’ (Apple Intelligence) என்று அழைக்கிறது. பல வேலைகளை ஆப்பிள் இன்டலிஜென்ஸ் எளிமையாக்கும் என வெளியீட்டு நிகழ்வில் நிறுவனம் தெரிவித்திருந்தது.

புதிய ஐஓஎஸ் 18-இல், எங்கிருந்து வேண்டுமானாலும் செயலி அல்லது விட்ஜெட்டுகளை எடுத்து முகப்பு திரையில் சேமிக்க முடியும். மேலும், ஐகான்களின் அமைப்புகளை மாற்றியமைக்க முடியும். முக்கியமாக இந்த அப்டேட் வாயிலாக கிடைக்கும் ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் குறித்து பயனர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்காக ’ஆப்பிள் சிரி’ (Apple Siri) உணரும்போது காட்டப்படும் சிறிய கிராபிக்ஸ் போன்று, திரையின் ஓரத்தில் ‘ஆப்பிள் இன்டெலிஜன்ஸ்’ ஆக்டிவேட் ஆகும்போது புதுவித ஒளிரும் கிராபிக்ஸ் காட்டப்படுகிறது.

மேலும், அதன் குரல் உயிருள்ள மனிதர்களின் தன்மையுடன் மெருகேற்றப்பட்டுள்ளது. ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் பயன்பாடு AI புகைப்படங்களை உருவாக்கும் சிறப்பையும் கொண்டுள்ளது. மெட்டா தலைமையின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப், கூகுள் ஜெமினை (Google Gemini) போன்றவற்றில் நாம் இதேபோன்ற அம்சத்தை முன் கண்டிருப்போம். இந்த சேவையைப் பயன்படுத்தி, நம் தேவைக்கேற்ப ஏஐ புகைப்படங்களை கேட்டு உருவாக்க முடியும். இந்த நிலையில், ஐஓஎஸ் 18 அப்டேட் கிடைக்கும் ஆப்பிள் ஐபோன்கள் எவை என்பதைக் கீழே காணலாம்.

ஆப்பிள் இன்டலிஜென்ஸ் (Credits: Apple)

iOS 18 புதுப்பிப்புக்கு தகுதியான ஐபோன்களின் பட்டியல்:

  • ஐபோன் 15 (iPhone 15)
  • ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus)
  • ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro)
  • ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max)
  • ஐபோன் 14 (iPhone 14)
  • ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus)
  • ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro)
  • ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max)
  • ஐபோன் 13
  • ஐபோன் 13 மினி
  • ஐபோன் 13 ப்ரோ
  • ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்
  • ஐபோன் 12
  • ஐபோன் 12 மினி
  • ஐபோன் 12 ப்ரோ
  • ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்
  • ஐபோன் 11
  • ஐபோன் 11 ப்ரோ
  • ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்
  • ஐபோன் XS
  • ஐபோன் XS மேக்ஸ்
  • ஐபோன் XR
  • ஐபோன் SE (2ஆம் தலைமுறை மற்றும் அதற்கு பிந்தைய மாடல்கள்)

புதிய ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் அம்சங்களை நாம் அனுபவிக்கலாம். ஆனால், பழைய மாடல்களில் Apple Intelligence பயன்பாடு ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களில் மட்டுமே செயல்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details