ஹைதராபாத்: இந்திய கணினி சந்தையில் லேப்டாப்களுக்கான தேவை சமீப காலகட்டத்தில் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பிரபலமான கணினி தயாரிப்பு நிறுவனமான ஏசர் தனது புதிய லேப்டாப் ஒன்றை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த மடிக்கணினிகளில் AI தொழில்நுட்பம், மிகவும் கவர்ச்சிகரமான தோற்றம், சக்திவாய்ந்த செயல்திறன் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏசர் ஸ்விஃப்ட் 14 ஏஐ (Acer Swift 14 AI) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பின் விலை மற்றும் இதர அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.
ஸ்பெஷிபிகேஷன்கள்:
- ஆப்பரேட்டிங் சிஸ்டம் - விண்டோஸ் 11 ஹோம்
- ப்ரொசஸ்சர் - ஸ்னாப்டிராகன் எக்ஸ் பிளஸ் 8-கோர் செயலி
- கிராபிக்ஸ் - குவால்காம் அட்ரினோTM GPU
- மென்பொருள் - MS Office ஹோம் மற்றும் ஸ்டூடண்ட்
- பேட்டரி - 75Wh பேட்டரி திறன், 28 மணிநேர பயன்பாடு
- ஸ்டோரேஜ் - 32GB வரை LPDDR5X ரேம் மற்றும் 2 TB PCIe Gen 4 NVMe SSD ஸ்டோரேஜ்
- செக்யூரிட்டி - ஃபேஸ் ரீடர் மற்றும் ஃபிங்கர்பிரிண்ட் ரீடர்
- கனக்ட்டிவிட்டி - Wi-Fi 7, புளூடூத் 5.4, தண்டர்போல்ட் 4 மற்றும் HDMI 2.1 போர்ட்
பிரத்தியேக சிறப்பம்சங்கள்:
- AI தொழில்நுட்பம்
- ஏசர் அசிஸ்ட்
- ஏசர் பியூரிஃபையிட் வீயூவ் 2.0
- ஏசர் பியூரிஃபையிட் வாய்ஸ் 2.0
- ஏசர் லைவ்ஆர்ட்