ஹைதராபாத்: நகர் பகுதிகளில் வாகனங்களின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் பெரும்பாலும் சாலையை ஆள்கின்றன. ஆனால், பலரும் முடி கொட்டும், அன்னிசையாக உள்ளது என்று பல்வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டு தலைக்கவசத்தை அணிய மறுக்கின்றனர்.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் என்பது உயிர்க்கவசமாகச் செயல்படுகிறது. இதன் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசத்தைக் கட்டாயம் அணிய வேண்டும் என போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாததைக் கவனித்த ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வேல்புராவச் சேர்ந்த ஃபானி குமார் என்ற இளைஞர், முடி கொட்டும் என்ற பயமே பெரும்பாலானோர் தலைக்கவசம் அணிய மறுப்பதற்கு காரணம் என்பதையும் கண்டறிந்துள்ளார்.
இதனை அடுத்து, பீமாவரத்தில் எம்.எஸ்சி முடித்துவிட்டு, JNTU கல்லூரியில் சுற்றுச்சூழல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள ஃபானி குமார், இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடிவெடுத்துள்ளார்.
மேலும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்து, 6 மாத கால கடின உழைப்புக்குப் பின்னர், சாலை விதிகளை காக்கும் விதமாகவும், தலைக்கவசத்தை அணிய மறுப்பவர்கள் கூறும் காரணங்களுக்கு தீர்வளிக்கும் விதமாகவும், சோல்டர் சப்போர்ட்டுடன் கூடிய தலைக்கவசம் (Shoulder Support Helmet) ஒன்றை உருவாகியுள்ளார். இதுதவிர, கழுத்தில் அணியக்கூடிய தலைக்கவசத்தையும் தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய ஃபானி குமார், "இந்த தலைக்கவசத்தை தெலங்கானா மாநில கண்டுபிடிப்பு பிரிவு (Telangana State Innovation Cell) சிறந்த கண்டுபிடிப்பாக தேர்ந்தெடுத்துள்ளது. தற்போது டீ ஒர்க் நிறுவனத்துடன் இணைந்து இறுதிக்கட்ட பணிகளைச் செய்து வருகிறேன். ஜுவ்வா இண்டஸ்ட்ரீஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளேன்.
இந்த தலைக்கவசம் நகரங்களில் பணியாற்றும் டெலிவரி பாய்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது தனது நண்பர்களால் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. காப்புரிமைக்குப் பிறகு இந்த தலைக்கவசம் குறைந்த விலையில் வழங்கப்படும். மேலும், இன்னும் மூன்று மாதங்களில் சந்தைக்கு கொண்டு வரப்படும்" என்றும் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:சீறிப்பாய காத்திருக்கும் அழகிய அசுரன்.. ஃபார்முலா 4 கார் பந்தயம் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை!