சாம்சங் ‘கேலக்சி அன்பேக்டு 2025’ நிகழ்வில் (Galaxy Unpacked 2025) புதிய கேலக்சி எஸ்25 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவி வைத்திருந்த வெளியீட்டு நிகழ்வு சீற்றத்தை, சாம்சங் தனதாக்கிக் கொண்டுள்ளது. ஆச்சரியமூட்டும் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டுவந்து, புதிய ஐபோன்களை கேள்விக்குளாக்கும் நிலையை கொரிய நிறுவனம் உருவாக்கியுள்ளது.
அப்படி என்ன ஸ்பெஷல் என நீங்கள் நினைப்பது சரி என்றாலும், அடிப்படை மாடலில் 12 ஜிபி ரேம், அறிமுக சலுகையாக ரூ.10,000 கேஷ்பேக், முற்றிலும் செயற்கை நுண்ணறிவுக்காகவே (AI) கட்டமைக்கப்பட்ட One UI 7 இயங்குதளம், கேலக்சி பிரீமியம் போன்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் என அம்சங்களை அள்ளித்தெளித்துள்ளது சாம்சங்.
மனதை கவரும் புதுமை அம்சங்கள்
முக்கியமாக, ஆண்ட்ராய்டு 15 அடிப்படையில் உருவாக்கப்பட்ட One UI 7 இயங்குதளத்தில் புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு அம்சங்களை சாம்சங் புகுத்தியுள்ளது. கேலக்சி ஏஐ (Galaxy AI) எனும் இது, கூகுளின் ஜெமினை 2.0 (Gemini 2.0) உடன் நேரடியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய இயங்குதளத்தில் கேலக்சி போன்களின் பிரத்யேக நோட்ஸ், நாள்காட்டி, மெசேஜஸ், மேப்ஸ் போன்ற பெரும்பாலான அனைத்து செயலிகளுடன் கேலக்சி ஏஐ ஒத்திசைந்து வேலை செய்வது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
Live your life to the fullest! Galaxy AI empowers you to manage everything with ease and giving you the freedom to focus on what truly matters. Open new possibilities with Galaxy AI.
— Samsung India (@SamsungIndia) January 23, 2025
Pre-order now: https://t.co/oeVBKrhRaV.#GalaxyAI #GalaxyS25Ultra #GalaxyS25 #Samsung pic.twitter.com/usQNT5dkQ7
குறிப்பாக வேலைகளை சுலபமாக்கும் நவ் பார் (Now Bar), எழுதுவதற்கான உதவி (Writing Assist), படம் வரைவதற்கான உதவி (Drawing Assist), புகைப்படம் எடுக்க உதவி (Photo Assist), காணொளிகளில் இருந்து தேவையில்லாத ஒலியை நீக்க உதவி (Audio Eraser) என அனைத்திற்கும் ஏஐ அடிப்படையிலான உதவிகளை சாம்சங் கேலக்சி எஸ்25 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பயனர்களுக்கு செய்யும் என வெளியீட்டு நிகழ்வில் நிறுவனம் பெருமிதப்பட்டது.
ஒருபக்கம் ஏஐ அடிப்படையிலான அம்சங்களை கொண்டு வந்துள்ள சாம்சங், பயனர்களின் தரவு பாதுகாப்பு குறித்த கவலைகளையும் நிவர்த்தி செய்துள்ளது. இதற்காக மொபைலில் நாம் பயன்படுத்தும் தரவுகள் மற்றும் தகவல்களைப் பாதுகாக்க Knox உடன் இணங்கிய மேம்பட்ட தனியுரிமை தகவல் இயந்திரம் (Personal Data Engine) அறிமுகம் செய்யப்பட்ட பிரீமியம் எஸ்25 போன்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்சி எஸ்25 சீரிஸ் விலை மற்றும் சலுகைகள்:
கேலக்சி எஸ்25 போனின் அடிப்படை 12ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.80,999 ஆகும். இதன் 512ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.92,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐசீ ப்ளூ, சில்வர் ஷேடோ, காக்கி, மின்ட் ஆகிய நான்கு வண்ணத் தேர்வுகளில் இவை விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
அதேபோல, 12ஜிபி + 256ஜிபி கேலக்சி எஸ்25+ மாடல் விலை ரூ.99,999 ஆகவும், 12ஜிபி + 512ஜிபி மாடல் ரூ.1,11,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. காக்கி மற்றும் சில்வர் ஷேடோ ஆகிய இரு நிறங்களில் இந்த மாடல் ஸ்மார்ட்போன்களை பயனர்கள் ஆர்டர் செய்யலாம்.
ஸ்மார்ட்போன்களின் அரசனாக வலம்வரும் சாம்சங் கேலக்சி எஸ்25 அல்ட்ரா போனின் அடிப்படை மாடல் (12ஜிபி + 256ஜிபி) விலை ரூ.1,29,999 ஆகவும், 512ஜிபி, 1டிபி ஸ்டோரேஜ் வேரியன்டுகள் முறையே ரூ.1,41,999 மற்றும் ரூ.1,65,999 ஆகவும் விற்பனைக்கு வருகிறது. டைட்டானியம் சில்வர்-ப்ளூ, டைட்டனியம் கிரே, டைட்டானியம் வைட்-சில்வர், டைட்டானியம் பிளாக் ஆகிய நான்கு நிறங்களில் களமிறக்கப்பட்டுள்ளன.
மேலும், ஜனவரி 31 வரை கேலக்சி எஸ்25 மற்றும் எஸ்25+ மாடல்களை ஆர்டர் செய்யும் எச்.டி.எஃப்.சி வங்கி பயனர்களுக்கு ரூ.10,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இதுவே, எச்.டி.எஃப்.சி கடன் அட்டை வாயிலாக சுலப மாதத் தவணைத் திட்டத்தில் வாங்கும் பயனர்களுக்கு ரூ.7,000 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே தவணையில் அல்ட்ரா மாடல்களை வாங்கும் பயனர்களுக்கு ரூ.8,000 கேஷ்பேக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாம்சங் கேலக்சி எஸ்25 மற்றும் கேலக்சி எஸ்25+ அம்சங்கள்
அடிப்படை மாடல் கேலக்சி எஸ்25 6.2-அங்குல முழுஅளவு எச்டி+ டைனமிக் அமோலெட் 2 எக்ஸ் (Full HD+ Dynamic AMOLED 2X) திரையுடன் வருகிறது. இது 120Hz ரெப்ரெஷ் ரேட், பீக் பிரைட்னஸ் 2,600 நிட்ஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறது. எஸ்25+ மாடலில் 6.7-அங்குல குவாட் எச்டி+ (QHD+) திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. பிற அம்சங்கள் அனைத்தும் அடிப்படை மாடலை போன்றே கொண்டிருக்கிறது.
இந்த போன்களில் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒன் யுஐ 7 (One UI 7) இயங்குதளம் உள்ளது. இதன் செயல்திறனை வலுப்படுத்த பிரத்யேக ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் 2 எக்ஸ் சூம் தரத்துடன், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் இருக்கிறது. இதனுடன் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் இணைக்கப்பட்டுள்ளன. செல்ஃபி எடுக்க 12 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
போனை திறன்பட இயக்க, அடிப்படை மாடலில் 4,000mAh திறனுள்ளதும், எஸ்25+ மாடலில் 4,900mAh திறனுள்ள பேட்டரியுடன் நிறுவப்பட்டுள்ளன. முறையே 15W மற்றும் 45W விரைவான சார்ஜிங் ஆதரவை இரு போன்களும் பெறுகின்றன. மேலும், 15W வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேரிங் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
சாம்சங் கேலக்சி எஸ்25 அல்ட்ரா அம்சங்கள்
சாம்சங் கேலக்சி எஸ்25 அல்ட்ரா மாடலில் 6.9-அங்குல முழுஅளவு குவாட் எச்டி+ டைனமிக் அமோலெட் 2 எக்ஸ் (QHD+ Dynamic AMOLED 2X) திரையுடன் வருகிறது. இது 1Hz முதல் 120Hz ரெப்ரெஷ் ரேட், பீக் பிரைட்னஸ் 2,600 நிட்ஸ், கார்னிங் கொரில்லா ஆர்மர் 2 பாதுகாப்பு போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறது. பழைய அல்ட்ரா மாடலைப் போலல்லாமல், புதிய போன் வளைந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
Seize the day the easy way with your very own Now Brief and Now Bar on the Galaxy S25 Ultra. Know more: https://t.co/RLJ7UtkW0m. #GalaxyAI #GalaxyS25Ultra #GalaxyS25 #Samsung pic.twitter.com/MgbLWf4BRU
— Samsung India (@SamsungIndia) January 23, 2025
இதையும் படிங்க |
எஸ்25 அல்ட்ரா, 1 டெரா-பைட் (டிபி) வரை ஸ்டோரேஜ் வசதியுடன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் வருகிறது. பின்பக்க கேமரா அமைப்பில், 200 மெகாபிக்சல் முதன்மை சென்சார் 2 எக்ஸ் சூம் தரத்துடன், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் இருக்கிறது. இதனுடன் 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் 5 எக்ஸ் சூம், 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ 3 எக்ஸ் சூம் ஆகிய லென்சுகள் இணைக்கப்பட்டுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 12 மெகாபிக்சல் கேமரா முன்பக்க திரையின் பஞ்ச் ஹோலில் நிறுவப்பட்டுள்ளது.
போனை திறன்பட இயக்க, 5,000mAh திறனுள்ள பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 45W விரைவான சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேரிங் போன்ற மேம்பட்ட அம்சங்கள் உள்ளன. தற்போது சாம்சங் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த பிரீமியம் மாடல் போன்கள், ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் மற்றும் கூகுள் பிக்சல் 9 சீரிஸ் போன்றவைகளுக்கு சந்தையில் கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.