தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசூர் பயங்கரம்.. அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சரணடைந்த ஆனந்தன், வெட்டுப்பட்ட கண்ணன்
சரணடைந்த ஆனந்தன், வெட்டுப்பட்ட கண்ணன் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு குற்றவியல் வழக்குகளை நடத்தி வரும் பிரபல வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கண்ணன் இன்று மாலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு வெளியே வரும் போது, ஆனந்தன் என்பவர் கண்ணனை வழி மறித்து கையில் எடுத்து வந்த அரிவாளால் சரமாரியாக கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து விழுந்த கண்ணன் சாலையில் உயிருக்காக போராடி கொண்டிருந்தார்.

இதையும் படிங்க:நெல்லை ஜெயக்குமார் வழக்கில் மூன்று மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்... செல்வப்பெருந்தகை தகவல்..!

அதன் பின்னர், ஆனந்தன் JM 2 நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதற்கிடையில், வழக்கறிஞர் கண்ணன் ஐந்து இடங்களில் பலத்தை வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் முன்விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதா? அல்லது பின்னணியில் பெண்கள் உடனான தொடர்பால் நிகழ்ந்ததா போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தாலுகா அலுவலகம், நீதிமன்றங்கள் அமைந்துள்ள பகுதியில், மக்கள் மத்தியில் நடந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, அரிவாளால் வெட்டிய ஆனந்த் என்பவரிடம் ஒசூர் நகர போலீசார் விசாரித்து வரும் நிலையில், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் காவல்துறை ஏஎஸ்பி அக்ஷய் அணில் வகாரே சமாதானம் பேசியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details