வேலூர்:தமிழகத்தில் இன்று முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பல நலத்திட்ட உதவிகளை திமுகவினர் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சித்தூரில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியின் திமுக செயலாளர்களான வன்னிய ராஜா, சுனில் குமார் தலைமையில் நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் 600 பேருக்கு புத்தாடைகள் மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்ச்சியின் அழைப்பாளராக கலந்து கொண்ட வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.