தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி திருவானைக்கோயில் யானை அகிலா 22வது பிறந்தநாள் கொண்டாட்டம்! - akila elephant birthday

akila elephant birthday: திருச்சி திருவானைக்காவல் கோயிலின் செல்லப்பிள்ளையாக வளம் வரும் அகிலாவின் யானையின் 22வது பிறந்தநாளை பக்தர்கள் விமர்சையாக கொண்டாடினர்.

பக்தர்களுடன் அகிலா யானை
பக்தர்களுடன் அகிலா யானை (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 11:50 AM IST

திருச்சி:பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவதும், கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்டதுமான திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோயிலில், காவிரியில் இருந்து துதிக்கை மூலம் தண்ணீர் கொண்டு வந்து யானை சிவபெருமானை வணங்கியதாக வரலாறு கூறுகிறது.

அதனாலேயே இந்த கோயிலுக்கும், யானைக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. ஒவ்வொரு கால பூஜையிலும் கோயில் யானை அகிலா மூலம் புனிதநீர் எடுத்துவரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும், சுவாமி தங்கரதப் புறப்பாடு உள்ளிட்ட திருவிழா உற்சவங்களிலும் கோயில் யானை அகிலா ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

அகிலா யானையின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ (Credit - ETV Bharat Tamil Nadu)

அகிலா யானை பிறந்தநாள்:2002ல் அசாம் மாநிலத்தில் பிறந்த யானையானது, கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் திருக்கோயில் பூஜைகள் மற்றும் திருப்பணிக்காக, திருவானைக்காவல் கோயிலுக்குகொண்டு வரப்பட்டது.

பின்னர் இந்த பெண் யானைக்கு அகிலா என் பெயர் சூட்டப்பட்டது. கோயில் யானையாகவே வளர்ந்து வரும் இதனைக் கவனித்து கொள்வதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் ஜம்புதாநன் என்ற பாகன் நியமனம் செய்து பராமரித்து வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் கோயில் நிர்வாகம் சார்பாக அகிலா யானையின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நேற்று 22-வது வயதை எட்டும் நிலையில் அகிலா யானைக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பிறந்தநாளையொட்டி அகிலா குளிப்பாட்டி அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டது. பின்னர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் யானைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு யானை பாகன்கள், அர்ச்சகர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் பங்கேற்ற யானை அகிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடி பின்னர் பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய், கொழுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி யானையை மகிழ்வித்தனர்.

யானையும் பக்தர்கள் மற்றும் பலரது வாழ்த்துக்களை சமமாகப் பெறும் வகையில் தும்பிக்கையை ஆட்டி தனது நன்றியைத் தெரிவித்தது அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. பின்னர் கோயில் வளாகத்தில் யானைக்காக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் யானை அகிலா ஆனந்த குளியல் போட்டு தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தது. இதனை பொதுமக்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பார்த்து மகிழ்ந்து செல்போன் மூலம் படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க:நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட பாராமெடிக்கல் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது?

ABOUT THE AUTHOR

...view details