தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இந்திய பார் கவுன்சிலிடம் வலியுறுத்தல்! - new criminal laws - NEW CRIMINAL LAWS

New Criminal Laws: மத்திய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்படி இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்த உள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பார் கவுன்சில் கூட்டம்
பார் கவுன்சில் கூட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 5:39 PM IST

சென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களால் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவற்றை திரும்பப் பெற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

வரைவுச் சட்டம் தயாரிக்கப்பட்ட கடந்த 2020ஆம் ஆண்டே உச்ச நீதிமன்ற நீதிபதி சட்ட வல்லுனர்கள் குழுவை நியமித்து ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டது. ஆனால், எந்த விவாதங்களும் நடத்தாமல் பார் கவுன்சிலின் ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாமல் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனைத்து மாநில பார் கவுன்சில் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், சங்க பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழுவை அமைத்து சட்டத்தை திரும்ப பெறும்படி பிரதமர், உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர்களை வலியுறுத்தும்படி இந்திய பார் கவுன்சிலிடம் கேட்டுக் கொள்கிறேன்.

அதன் பிறகும் சட்டங்கள் திரும்ப பெறாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்படி இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்த உள்ளோம். இந்த சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில், குழுவை நியமித்த தமிழக அரசின் முடிவுக்கும் சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் குறித்து காவல் துறை அறிக்கை கிடைத்ததும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 120 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இனிமேல் சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டுமல்லாமல் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்களை நிரந்தரமாக நீக்குவது குறித்து கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். குற்ற பின்னணி இல்லாதவர்கள் மட்டுமே பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்படுவர். வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வலியுறுத்த உள்ளோம்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:"மத்திய பாஜக அரசை விரைவில் பதவியிலிருந்து இறக்க வேண்டும்" - கனிமொழி ஆவேசம்! - DMK Party Members Protests

ABOUT THE AUTHOR

...view details