ETV Bharat / bharat

அதிரப்பள்ளியில் காட்டு யானைக்கு மயக்க ஊசி போட்டபோது நிகழ்ந்த சம்பவம்! - KERALA ELEPHANT HEAD INJURY

மயக்கமருந்து செலுத்தப்பட்டு பிடிபட்ட யானைக்கு தொடர்ந்து இரண்டு நாள்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

யானைக்கு மயக்க மருந்து செலுத்த தயாராகும் மருத்துவர்கள்
யானைக்கு மயக்க மருந்து செலுத்த தயாராகும் மருத்துவர்கள் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2025, 2:15 PM IST

திருச்சூர் / கேரளா: அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில், தலையில் காயமடைந்த யானை ஒன்று சுற்றித் திரிந்தது. தற்போது அந்த யானையை பிடித்து சிகிச்சை அளிக்கும் பணி வெற்றிகரமாக முடிந்ததுள்ளது. மயக்க ஊசி போட்டு யானையைப் பிடித்த வனத்துறையினர், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கோடநாடு கப்ரிக்காடு அபயரண்யம் சரணாலயத்திற்கு மாற்றினர்.

இதற்காக இன்று (பிப்ரவரி 19) காலை ஆறு மணியளவில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். யானை வெட்டிலப்பாறை பதினேழாம் பிளாக்கில் இருப்பது உறுதி செய்யப்பட்டதும், மருத்துவர் அருண் சக்கரியா தலைமையிலான குழுவினர் யானை இருந்த இடத்திற்குச் சென்றனர். மயக்க ஊசி போட முயன்றபோது, ஏழட்டுமுகம் கணபதி என்ற மற்றொரு காட்டு யானை காயமடைந்த யானையுடன் இருந்தது.

அப்போது தலையில் காயமடைந்த யானைக்கு மயக்க ஊசி போட்டு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். மயக்க ஊசி போட்ட பிறகு, யானை மெல்ல மயக்கமடைய ஆரம்பித்தது. அப்போது யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது.

மயக்கமடைந்த நிலையில் இருக்கும் யானை
மயக்கமடைந்த நிலையில் இருக்கும் யானை (ETV Bharat)

ஏழட்டுமுகம் கணபதி

இதன் அருகில் இருந்த ஏழட்டுமுகம் கணபதி என்ற மற்றொரு யானை, மயக்கமடைந்த யானையை தாங்கிப் பிடிக்க வந்தது. கணபதி முன்னரே ஒரு சமூக ஊடக பிரபலம் ஆகும். இதன் குறும்புத்தனமான செயல்பாடுகள் பலமுறை இணையத்தில் வீடியோக்களாக வெளியாகி அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது. ஆனால், இன்று கணபதியின் குறும்புத்தனம் எதையும் காண முடியவில்லை.

தனது நண்பனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனிடம் இருந்தது. மயக்கமடைந்த யானையை எழுப்பவும், தாங்கிப் பிடிக்கவும் கணபதி எவ்வளவோ முயற்சித்தது. தும்பிக்கையால் தழுவியும், தந்தத்தால் குத்தியும் எழுப்ப முயற்சித்தது. ஆனால், முடியவில்லை. கடைசியில் யானை கீழே விழுந்தது. உடனே வனத்துறையினர் ரப்பர் தோட்டாக்களால் கணபதியை விரட்டினர். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மயக்கமடைந்த யானையின் காயத்தை மருத்துவர் அருண் ஜக்காரியா தலைமையிலான மருத்துவக் குழு சுத்தம் செய்தது. பின்னர், அது ஒரு லாரியில் ஏற்றப்பட்டு கொடநாட்டிற்கு அனுப்பப்பட்டது.

காயம் குறித்து மருத்துவர்

அருண் ஜக்காரியா காட்டு யானையின் தலையில் ஏற்பட்ட காயம் ஆழமாக இருந்ததாக ஈடிவி பாரத்திடம் தெரிவித்தார். மேலும், “காயம் புழுக்களால் நிறைந்திருந்தது. காயம் விரிவடைந்து, புழுக்கள் அகற்றப்பட்டன. மருந்து தடவப்பட்டு, காயத்திற்கு கட்டு போடப்பட்டது. தொற்று மிகப்பெரிய சவாலாக உள்ளது.

தொற்று பரவாமல் தடுக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுக்கப்பட வேண்டும். காட்டில் சிகிச்சை அளிப்பது ஆபத்தானது. அதனால்தான் அது கொடநாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. யானையின் உடல்நிலை குறித்து கருத்து தெரிவிக்க இயலாது. அடுத்த இரண்டு நாட்கள் யானையை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளிக்க வேண்டும்," என்று கூறினார்.

யானைக்கு மயக்க மருந்து செலுத்தும் நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ (ETV Bharat)
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க, வைர நகைகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு!

யானை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் விவேக் கூறுகையில், “காயத்தில் ஈக்கள் வந்து முட்டையிடும்போது புழுக்கள் உற்பத்தியாகின்றன. காயத்தில் புழுக்கள் பெருகும். இதனுடன், தும்பிக்கையுடன் மணல் வீசப்படும். இதனால் காயம் இன்னும் மோசமடையும். முதல் சவால் காயத்தில் உள்ள பழுப்பை முழுவதுமாக அகற்றுவதாகும்.

சிகிச்சையின் ஆரம்ப கட்டம் லேசான மயக்க மருந்துடன் இதற்கான பிரத்யேகக் கூண்டில் வழங்கப்படும். பாக்டீரியா பரவுவதைத் தடுக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஊசி மூலமாகவும் வாய்வழியாகவும் செலுத்தப்படும். மூன்று வாரங்களுக்குப் பிறகும் யானையின் உடல்நிலை மேம்படும் என்று நம்பப்படுகிறது. மருந்துக்கு எதிர்வினை மிக முக்கியமானது. காயம் விரைவாக குணமடைந்தால், பணி வெற்றி பெறும்," என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.