ETV Bharat / state

"அப்பா என்றால் படிக்க வைக்கணும், குடிக்க வைக்கக் கூடாது" - சீமான் தாக்கு! - SEEMAN

தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு "அப்பா" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அப்பா என்றால் எல்லா பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும், நன்றாக குடிக்கக் வைக்க கூடாது" என சீமான் தெரிவித்தார்.

சீமான்
சீமான் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2025, 2:03 PM IST

விழுப்புரம்: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சையாக பேசி வன்முறையைத் தூண்டியதாக சீமான் மீது கஞ்சனூர் போலீசார் பதிவு செய்த வழக்கின் விசாரணையை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது விக்கிரவாண்டி குற்றவியல் நீதிமன்றம். விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி, சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், நேற்று (பிப்.19) காலை விக்கிரவாண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அப்பா என்று அழைக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லியுள்ளாரே? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "அப்பா என்றால், இப்படி பண்ணிட்டீங்களே அப்பா என்று சொல்லி இருப்பார்கள். அவரையும், அவரது கட்சிக்காரர்களையும் தவிர வேறு யாராவது ஒருவரை நல்லாட்சி நடக்கிறது என்று சொல்ல சொல்லுங்கள்.

அப்பா என்றால் குடிக்க வைக்க கூடாது:

அரசு ஆக்கிரமித்தால் சட்டம், மக்கள் ஆக்கிரமித்தால் குற்றமா? பள்ளிக்கரணை ஏரியை ஆக்கிரமித்து, அரசு குப்பை மேடாக்கியுள்ளது. ஆக்கிரமிப்பை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? நல்லாட்சி என்று சொல்பவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? அப்பா என்ற சொல்லுக்கு மாண்பு உள்ளது. ஜெயலலிதாவை அம்மா என்று அழைப்பது போல, அறிஞர் அண்ணா என்று உள்ளது போல, அப்பா என்று அடையாளம் ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார். அப்பா என்றால் எல்லா பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும், நன்றாக குடிக்க வைக்க கூடாது" எனத் தெரிவித்தார்.

இந்தி தெரிந்தால்தான் இந்த நாட்டில் வாழ முடியும்?

அதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையிலேயே மும்மொழிக் கொள்கை உள்ளதாக அண்ணாமலை விமர்சித்து உள்ளாரே? என்ற கேள்விக்கு, "அண்ணமலை ஐபிஎஸ் படித்தது போதாது எங்கள் வரைவு அறிக்கையை நன்றாக படிக்க வேண்டும்.

அதில் கொள்கை மொழி தமிழ், பயன்பாட்டு மொழி ஆங்கிலம் என்று போட்டுள்ளோம். உலகின் எல்லா மொழிகளும் விருப்ப மொழி இந்தி உட்பட என்று போட்டு உள்ளோம். முதலில் அவர் தமிழனாக இருந்து பேச வேண்டும். இந்தி எனக்கு எதற்காக தேவை.

வடஇந்தியாவில் பணி செய்ய சென்றால் இந்தி தேவை கருதி கற்றுக் கொள்ளப்போகிறோம். இந்தி படி என்று சொல்லும் அண்ணாமலை, தமிழ் படிக்க பள்ளிக்கூடம் வைக்கவில்லையே?. என்னை கேள்வி கேட்கும் அண்ணாமலையின் பிள்ளைகள் எங்கு படிக்கிறது?. இங்கு பள்ளிக் கூடம் சுடுகாடாகத்தான் உள்ளது. சீமான் மகன் எங்கு படித்தால் உனக்கு என்ன? இந்தி தெரிந்தால் தான் இந்த நாட்டில் வாழ முடியும் என்று சொல்வதை ஏற்க முடியாது" என்றார்.

இதையும் படிங்க: மும்மொழிக் கொள்கை: திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைவர்கள் பேசியது என்ன?

மேலும், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி ஒதுக்குவோம் என்று மத்திய அரசு கூறி உள்ளதே? என்ற கேள்விக்கு, "மத்திய திட்டத்தை பின்பற்றினால் தான் நிதி ஒதுக்குவோம் என்று சொல்வது எப்படி ஜனநாயகம் ஆகும்? உங்கள் காசை கேட்கவில்லை.

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்:

மாநிலங்களின் நிதி வருவாயின் பெருக்கம் தான் இந்திய ஒன்றிய அரசின் நிதி. இந்திய அரசுக்கு என்று வருவாய் பெருக்கத்திற்கு ஏதாவது வழி உள்ளதா? மாநிலங்கள் தரும் வரி வருவாயின் பெருக்கம்தான் நிதி வளமை.

இதை செய்தால் தான் நிதி தருவோம் என்று சொல்வது கொடுங்கோன்மை. இந்தி கட்டாயமாக கற்க வேண்டும் என்ற அவசியம் ஏன்? நாட்டில் உள்ள ஏழ்மை, வறுமை, பசி, பட்டினி, வேலையின்மை எல்லாத்திற்கும் ஒரே மருந்து இந்தி கற்பதுதானா? இந்தியை ஏன் வலிந்து திணிக்கிறீர்கள்? கல்வி பொதுப்பட்டியலுக்கு சென்றதால் தான் இந்த பிரச்னை. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.