ETV Bharat / health

சரியாக வேகவைக்கப்படாத கோழிக் கறியை சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா? - GUILLAIN BARRE SYNDROME RISK

குய்லின்-பார் சிண்ட்ரோம் (Guillain-Barré Syndrome) காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உணவு பாதுகாப்பு முறைகளை தீவிரமாக கடைபிடிப்பது முக்கியமாகும்.

குய்லின்-பார் சிண்ட்ரோம் அபாயத்தில் இருந்து விடுபட பாதுகாப்பு முறைகள்
குய்லின்-பார் சிண்ட்ரோம் அபாயத்தில் இருந்து விடுபட பாதுகாப்பு முறைகள் (Freepik)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2025, 2:10 PM IST

Updated : Feb 19, 2025, 2:21 PM IST

ஹைதராபாத்: குய்லின்-பார் சிண்ட்ரோம் (Guillain-Barré Syndrome) காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் உணவு பாதுகாப்பு முறைகளை தீவிரமாக கடைபிடிப்பது முக்கியமாகும். சமையல் அறையில் சில கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் இந்த தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களில் குய்லின்-பார் சிண்ட்ரோம் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிண்ட்ரோம் உடன் தொடர்புடைய பாக்டீரியா தொற்று அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முறையான உணவு கையாளுதல், உணவு சமைத்தல் முறைகளை மேற்கொள்ள வேண்டும் வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அதே நேரத்தில் குய்லின்-பார் சிண்ட்ரோம் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்பதற்கு சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த நிலையில் இது குறித்து மும்பை லீலாவதி மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சி.சி.நாயர் கூறுகையில், "சரியாக சமைக்கப்படாத கோழி இறைச்சிகள், காணப்படும் கேம்பிலோபாக்டர் ஜெஜூனி (Campylobacter jejuni), சுத்தம் இல்லாத காய்கறிகள், பால், அழுக்காக காணப்படும் சமையலறை ஆகியவற்றின் மூலம் இந்த அபாயகரமான பாக்டீரியா உருவாகி தீங்கு விளைவிக்கும் தொற்றை ஏற்படுத்தக் கூடும் என்றார்.

உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தை பாதுகாக்க கீழ் குறிப்பிட்ட உணவு பாதுகாப்பு முறைகளை கையாளலாம்.

1. சரியான வெப்ப நிலையில் கோழி இறைச்சியை சமைக்க வேண்டும்

சற்றே இளம் சிவப்பு நிற கோழி இறைச்சியை உண்ணும் பழக்கத்தை நீங்கள் கொண்டிருந்தால், சரியாக சமைக்கப்படாத கோழி இறைச்சியில் கேம்பிலோபாக்டர் ஜெஜூனி பாக்டீரியா வளர்ந்திருக்கும். இது குய்லின்-பார் சிண்ட்ரோம் உடன் தொடர்புடைய முன்னணி பாக்டீரியா பாதிப்புகளில் ஒன்றாகும்.

பாதுகாப்பான சமையல் குறிப்புகள்

பாக்டீரியாவை அகற்றும் வகையில் 75 டிகிரி சென்டிகிரேட்டில் எப்போதுமே கோழி இறைச்சியை சமைக்க வேண்டும். உணவு தெர்மா மீட்டரைப் பயன்படுத்த வேண்டும். சுத்தம் செய்யப்படாத இறைச்சியை கழுவுவதை தவிர்க்கவும். மாறாக சுத்தம் செய்யப்படாத இறைச்சியை கழுவும்போது சமையலறையின் தரைப்பரப்பில் பாக்டீரியா தொற்று பரவக் கூடும்.

2. காய்க்கறிகளை முழுமையாக கழுவவும்

முறையாக கழுவப்படாத காய்கறிகளில் பாக்டீரியா, பூச்சி மருந்துகள், விஷதன்மை ஆகியவை இருக்கக்கூடும். எனவே இதனால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அனைத்து பொருட்களையும் குழாயில் இருந்து வரும் தண்ணீர் மூலம் முழுமையாக கழுவ வேண்டும்.

பாதுகாப்பாக சுத்தம் செய்வதற்கான குறிப்புகள்

கூடுதல் பாதுகாப்புக்காக கீரைகள், காய்கறிகள், பழங்களை தண்ணீர் மற்றும் வினிகர் கலந்த கலவை அல்லது பேக்கிங் சோடாவில் கழுவி உபயோகிக்க வேண்டும். உண்பதற்கு முன்பு முழுமையாக கழுவ முடியாவிட்டால் நறுக்கப்பட்ட பழங்களை உண்பதை தவிர்க்கவும். உருளை கிழங்கு, பீட்ரூட், கேரட் ஆகிய காய்கறிகளை தோல் உரிக்கும் போது அழுக்குகள், பாக்டீரியாக்கள நீக்க ஒரு பிரஷை பயன்படுத்தவும்.

3. சூடுபடுத்தப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களை உபயோகிக்கவும்

சூடுபடுத்தப்படாத பால், வெண்ணைய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களில் உடலுக்கு அபாயம் ஏற்படுத்தும் கேம்பிலோபாக்டர், லிஸ்டீரியா மற்றும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரிக்கள் இருக்கலாம். இவை உணவில் தொற்றை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கும்.

பால் பொருட்களுக்கு பாதுகாப்பான குறிப்புகள்

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை தவிர்க்க எப்போதுமே சூடுபடுத்தப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். தயிர், பன்னீர், மோர் ஆகியவற்றை அப்படியே உண்ணும் போது, அவை பாதுகாப்பான முறையில் இருந்து வந்தவை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

4. காய்கறி நறுக்கும் கட்டைகள், கத்திகளை சுத்தம் செய்யவும்

காய்கறிகளை நறுக்கப் பயன்படுத்தும் அழுக்கு நிறைந்த கட்டை உங்கள் சமையல் அறையில் மிக வேகமாக பாக்டீரியா பரவுவதற்கு வழிவகுக்கும். நீங்கள் கோழி இறைச்சியை வெட்டப் பயன்படுத்தும் கத்தியை காய்கறியை நறுக்கவும் பயன்படுத்தும் போது உங்களுக்கு தெரியாமல் பாக்டீரியா தொற்று பரவக் கூடும்.

பாதுகாப்பான சமையல் அறை குறிப்புகள்

இறைச்சி, காய்கறிகளை வெட்டுவதற்கு தனித்தனி கட்டைகளை பயன்படுத்தவும். கத்திகள், பாத்திரங்கள், சமையலறை தரை பரப்பு ஆகியவற்றை சூடான தண்ணீர் அல்லது சோப்பு தண்ணீர் மற்றும் வினிகர் கொண்டு கழுவவும். பாதுகாப்பான உணவுக்கான சானிடைசர் அல்லது வினிகர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தரைப்பரப்புகளை சுத்தம் செய்யவும்.

5. உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பாக்டீரியா பெருகுவதை அனுமதிக்காதீர்

சுத்தம் செய்யப்படாத இறைச்சி, பால்பொருட்கள், பழைய உணவு பொருட்களை முறையற்ற வகையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருப்பது பாக்டீரியா பல்கி பெருகுவதை அதிகரிக்கும்.

பாதுகாப்பாக சேமிக்கும் முறைகள்

இறுக்கமாக மூடப்பட்ட பாத்திரத்தில் இறைச்சியை வைத்து அதனை உங்கள் குளிர் சாதனப்பெட்டியின் கடைசி அடுக்கில் வைக்கவும். இறைச்சியை மேல் அடுக்கில் வைத்தால் அதில் இருந்து சொட்டும் தண்ணீர் இதர உணவுப் பொருட்களில் கலக்கக்கூடும். சமைக்கப்பட்ட உணவுகளை இரண்டு மணி நேரத்திற்குள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். அவற்றை 3 முதல் 4 நாட்களுக்குள் உண்ண வேண்டும். அழுகக் கூடிய உணவுப் பொருட்களை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அறையின் வெப்பத்தில் வைத்திருக்கக்கூடாது.

பாதுகாப்பான சமையல் அறைக்கான குறிப்புகள்

இறைச்சியை எப்போதும் 75 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் சமைக்கவும். குழாயில் இருந்து விழும் தண்ணீரில் காய்கறிகளை முழுமையாக கழுவவும். கீரைகள்,தண்டுகளை வினிகர் அல்லது பேக்கிங் சோடா பயன்படுத்தி சுத்தம் செய்யவும். காய்கறி நறுக்கப்பயன்படுத்தும் கத்தி, கட்டைகளை சுத்தம் செய்து வைக்கவும். இறைச்சியை தனியாக முறையாக சேமித்து வைக்க வேண்டும்.

பாதுகாப்பான சமைக்கும் பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் உணவு மூலம் பரவும் பாக்டீரியாவின் காரணமாக குய்லின்-பார் சிண்ட்ரோம் அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

Last Updated : Feb 19, 2025, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.