தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரதட்சணை நகையை தன்வசமாக்கிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! - Tirumangalam Inspector suspend

Tirumangalam Inspector Geetha Suspended: மதுரையில் வரதட்சணை புகாரின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட நகையை அடகு வைத்த குற்றச்சாட்டில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் போலீசார் மற்றும் காவல் நிலையம் புகைப்படம்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் போலீசார் மற்றும் காவல் நிலையம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 2:56 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ராஜேஷ் மற்றும் அவரது மனைவி அபிநயா ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இருதரப்பினரும் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த கீதா இவ்வழக்கை விசாரித்து வந்துள்ளார்.

இதற்கிடையே, திருமணத்தின்போது தனது பெற்றோர் சார்பாக வழங்கப்பட்ட நகைகளை ராஜேஷிடம் இருந்து வாங்கித் தருமாறு அபிநயா ஆய்வாளர் கீதாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து 95 பவுன் நகைகளையும் ராஜேஷ் ஆய்வாளர் கீதாவிடம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்துள்ளார். ஆனால், அந்த நகைகளை அபிநயாவிடம் கொடுக்காமல், வேண்டுமென்றே ஆய்வாளர் கீதா காலம் தாழ்த்தி வந்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் சந்தேகமடைந்த ராஜேஷ், திருமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போது, அனைத்து நகைகளையும் காவல் ஆய்வாளர் கீதா தனது சொந்த தேவைக்காக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.43 லட்சத்திற்கு அடகு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, நகையை திருப்பி தருவதற்கு ஆய்வாளர் கீதா அவகாசம் கேட்டிருந்துள்ளார். பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அடகு வைத்த நகைகளில் சிலவற்றை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதி 70 பவுனுக்கும் மேற்பட்ட நகையை தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இந்த வழக்கு குறித்து விசாரித்த டி.ஐ.ஜி ரம்யபாரதி, ஆய்வாளர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கடலில் மூழ்கி பள்ளி மாணவனும், மாணவியும் தற்கொலை முதல் ஆந்திரா திருட்டு கும்பல் பிடிபட்டது வரை - சென்னை குற்றச் செய்திகள்

ABOUT THE AUTHOR

...view details