தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துரத்திய கடன் தொல்லை.. திருப்பத்தூரில் தாய், மகள் தற்கொலை.. போலீஸ் கூறிய துயரமான தகவல்! - tirupathur family suicide - TIRUPATHUR FAMILY SUICIDE

Mother daughter suicide case: திருப்பத்தூரில் கடன் தொல்லையால் தந்தை தற்கொலை செய்துகொண்டதை அடுத்து மனைவியும், மகளும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர்
தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 1:04 PM IST

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் குகநாதன் - கற்பகம் (42) தம்பதி. இவர்களது மகள் சுபிக்ஷா (17). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த குகநாதன் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இந்நிலையில், வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வந்துள்ளார். அப்போது தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான குகநாதன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆனால், தொடர்ந்து இவரது மனைவி கற்பகத்தையும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொந்தரவு செய்ததால் சொந்த வீட்டில் இருந்து கோடியூர் பகுதியில் வாடகைக்கு சென்று மகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், தாய், மகள் இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 12-ஆம் வகுப்பு முடித்துள்ள சுபிக்ஷா மற்றும் அவரது தாயார் கற்பகம் ஆகிய இருவரும் வெளி உலகம் தெரியாமல் வளர்ந்ததாக கூறப்படுகிறது.

அதனால் கடன் கேட்டு வந்த நபர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தாய் கற்பகம், மகள் ஆகிய இருவரும் குகநாதன் இறந்த துக்கத்திலும், கடன் பிரச்சினை காரணமாகவும் மன உளைச்சலில் இருந்த நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

இதையும் படிங்க:அரசுப் பள்ளியில் 50 கிராம் கஞ்சா.. டிஐஜி பெயரில் பேக் ஐடி.. சென்னை குற்றச் செய்திகள்!

ABOUT THE AUTHOR

...view details